பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே. சண்முகம்

74



நொந்து நொடித்து நீ அகத்தடியில் கிடக்கின்றாய்!

ஆமாண்டா தம்பீ! 'அசலான' உண்மை இது!

கோமாளி அரசியலில் கொடிபிடிப்போர் அனைவருமே

சாமான்ய மனிதனெனச் சகட்டுமேனிக் கணக்காலே

நாமாவளி பாடி நைச்சியமாய் உன் வோட்டைக்

கறக்க வருகின்றார்! களவாடிப் போகின்றார்!'

கிறக்க நிலையில் நீ கேடுணர வாய்ப்பில்லை!

வோட்டர்களின் பட்டியலில் உண் பெயரை மறக்காமல்

போட்டதொரு தொண்டன்றிப் பொறுப்பாக வேறெதுவும்

செய்யத் துணியவில்லை தேச மகாப் புருஷர்கள்!

ஐயகோ சோதரனே! அநியாயம் வேறுண்டா ?

உண்ணும் உணவில் நீ ஒரு மாற்றம் காணவில்லை!


கண்ணையே அழுக்காக்கும் கந்தலுடை மாற்றவில்லை!

மாளிகைகள் வளர்ந்தாலும் மண் குடிசை போகவில்லை!

தூளிகள் மரங்களிலே தோன்றாமல் இருக்கவில்லை!

பொம்மை மரப்பாச்சி போட்டபடி கிடப்பது போல்

வெம்மை வறுமையதில் விழுந்தழுத்திக் கிடக்கின்றாய்!