13 தடைவிதித்த காரணத்தால் 1 திராவிட இயக்கத்தின் கொள்கை கொண்டமனிதன் வாழ்வது கூடபிடிக்காது போலிருக்கிறதே, காலம் செல்லச் செல்ல ! உடையார் பாளயம் வேலாயுதம் பிணமாக்கப்பட்டு மரக்கிளையிலே தொங்கவிடப்பட்டது ஏன்? நெல்லிக் குப்பத்திலே, மஜித் என்ற இளம் வாலிபன் பட்டப் பகலிலே, குத்திக் கொலை செய்யப்பட்டது ஏன் ?• சென்னையிலே, பகுத்தறிவுக் கொள்கை கொண்டு வாழ்ந்து வந்த பாண்டியன், படுகொலை செய்யப்பட்ட தும், எந்தக் காரணத்தால்! இன்னும் எத்தனையெத்தனை தேனீ, கம்பம், கமுதிபோன்ற கலகங்கள், காலிவேலைகள் இயக்கக் கூட்டங்களைக் கலைத்துக் குழப்பம் உண்டாக்கிட நடைபெற்றன, நாட்டில்? தெரியாதா மக்களுக்கு? அடக்கமுறை, அடிதடி தடியடிதர்பார், கைது, காவல், தண்டனை, துப்பாக்கிப் பிரயோகம் எல்லாம் கையாளப் பட்டனவே, எங்கள் மீது ? ஏன் ? ! காமராஜர் கூறுகிறார், கவலைப்படவேண்டாம், என்று கவலையைப் போக்கிக் கொள்ள ! பரிதாபம் ! அலட்சியம் செய்து, கட்டுப்பாடாகத் திட்டமிட்டுத் தூற்றி, பொய்ப்பிரசாரங்கள் பலபல புரிந்து, நாஸ்திகர் என் று நாடெங்கும் பரப்பி, செய்திகளைத் திரித்துப் பத் திரிகைகளிலே போட்டு கிண்டல், கேலி புரிந்து பல விதங்களிலே மக்களிடமிருந்து நம்மைப் பிரித்திட, மறைத்திட, மாறுபடுத்திக் காட்டிட, செய்த அத்தனை முயற்சிகளும் தேய்ந்து ஓய்ந்து போன நிலையிலே. நம்மைப் பற்றிக் கவலைப்படும் கட்டத்திற்குக் காங் கிரஸ்காரர்கள் வந்து விட்டிருக்கிறார்கள் இன்று ! இதனைக் காமராஜர் போன்றார், கவலைப் படவேண்டியதில்லை, என்று அலட்சியமாகவும், அசட்
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/13
Appearance