14 டையாகவும், அவர்களென்ன சாமான்யம், என்பது போலப் பேசி, நாம் ஒரு பொருட்டல்ல என்பதாக மக் களிடையே பேசி விட்டதாக நினைத்துக் கும்மாள மடிக் கின்றனர்! ஒரு உண்மையைக் காமராஜர் போன்றார் உணர வேண்டும். மகத்தான எதிர்ப்புகளுக்கும், ஏசல் பூசல்களுக் கிடையிலேயும், மங்கி மறையாது தழைத்துத் துளிர்த்து ஓங்கி வளர்ந்து வரும் இந்த இயக்கத்தை பொழுது போக்குககாரர்கள். வளர்க்கும் இயக்கம் என்று குறிப் பிட்டாரே, அதனை மீண்டும் நினைவில் நிறுத்திப் பார்க்க வேண்டும்! அதே நேரத்தில், இத்தகைய, முழு நேரத் தொண்டர்கள், தலைவர்களற்ற பொழுதுபோக்குக்காரர் கள், பாடுபட்டு வளர்க்கும் போதே இந்த இயக்கத்தின் நிலை, அவர்கள், காங்கிரசார் கவலைப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால், ஒரு சிலராவது முழுநேரத் தொண்டராக, தலைவராக மாறிவிட்டால், இயக்கம், எங்கள் இயக்கம் என்ன நிலைமைக்கு உயர்ந்து விடும் என்பதை எண்ணிப் பார்த்தாரா? பார்ப்பாரா? என்று கேட்கிறேன். பொழுது போக்கும் நேரத்திலே பேசப்படும். பேச்சு, மக்களிடத்திலே எத்தகைய மனமாறுதலை உண் டாக்கியிருக்கிறது என்பதை யெண்ணிப் பாருங்கள் ! போகிறபோக்கிலே நடத்திடும் நாடகங்கள் எத்தனை எழுச்சியை, எண்ணப் புரட்சியை நாட்டிலே ஏற்படுத் திட வித்தூன்றியுள்ளன என்பதைக் காணவேண்டும், காமராஜர் ! பொழுதுபோக்கு, என்று சுருக்கமாக, ஆனால் கேலி கிண்டல் என்ற முறையிலே கூறிவிட்டார் காம ராஜர். ஆனால் இதிலேதான் நமது நிலை, உண்மை நிலை, உள்ளநிலை, நமது இயக்கத்தின் உயர்நிலை ஒப்பற்றநிலை
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/14
Appearance