16 கட் நிதி மாதாமாதம் சம்பளம் கொடுத்துப் பலரைக் சிக்காகப் பேசவோ, உழைக்கச் சொல்லவோ கட்சியில் நிதியில்லை என்பது மட்டுமல்ல, அத்தகைய கொடுத்து, வேலைவாங்கி, வளர்க்கப்பட வேண்டிய நிர்ணயமற்ற, நியாயமும் நீதியும் நேர்மையுமற்ற, நிரந் தரமுமற்ற, நிலையற்றகொள்கை கொள்கை கொண்ட கட்சியல்ல எங்கள் கட்சி ! எங்கள் கட்சி- இயக்கம், மக்கள் கட்சி-மக்கள் இயக்கம்! மக்களின் குறைகள், எந்த துறையிலேயும் நீங்கி, நீக்கப்பட்டு மக்கள் மக்களாகவே வாழ்ந்திடும் வழி வகைகளைக் கண்டு, காட்டி, மக்களை நல்ல வாழ்விற்கு, நாகரிக வாழ்விற்கு நடத்திச்செல்லும் நல்லறிவாளர் களைக் கொண்டது-எங்கள் இயக்கம். நல்லறிவாளர்கள் நாட்டின் நலத்திலே நாட்டங்கொண்டு உழைத்திடும் உத்தம உள்ளமும் உணர்வும் உறுதியும் படைத்த நல் லறிவாளர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் அத்தனைபேரும் எங்கள் இயக்கத்தின் தொண்டர்களே ! கட்சியின் அங் கத்தினர்களே ! இந்த நடமாடுங் கல்லூரியின் ஆசிரியர் களே ! மாணவர்களே !
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/16
Appearance