நடமாடுங் கல்லூரி- நல்லறிவுக் கல்லூரி நடமாடுங் கல்லூரி! நல்லறிவுக் கல்லூரி! நாட் டிலே நல்லறிவை, நல்லறி வுணர்ச்சியைப் பரப்பிடும் பணிபுரிந்திடும் கல்லூரி-நடமாடுங் கல்லூரி எங்கள் இயக்கம் ! நடமாடுங் கல்லூரி! பட்டிதொட்டி, நாடுநகரம் குழந்தை முதல் கிழவர் வரை மனித மனம் படைத்த மனிதரின் எண்ணங்களிலெல்லாம் நடைநொடி பாவனை அத்தனையிலும் ஊறிப் பதிந்து விட்ட கல்லூரி-நட மாடுங் கல்லூரி! அறிவின் ஆரம்ப காலந்தொட்டு இன்றுவரை அழி யாத அழிக்க முயன்றும் அழியாத, அழிக்கவே முடியாத அறிவுக் கல்லூரி-நல்லறிவுக் கல்லூரி-நடமாடுங் கல்லூரி ! நடமாடுங் கல்லூரி, மனித வாழ்வின் ஒவ்வொரு எண்ணத்திலும், எழுச்சியிலும் நடைமுறையிலும் நட மாடுகின்றது. நல்லறிவுப் போதனை, நல்லறி வுணர்ச்சி ஊக்கம் ஊட்டி, நல்லறிவுப் பாதையிலே நாட்டினரைச் செலுத்தி, நல்ல வாழ்வு-நாகரிக வாழ்வு வாழ்ந்திடத் துணைபுரிகிறது-நடமாடுங் கல்லூரி ! மனிதர் மனிதராக வாழ-மனிதர் மிருகங்களின் நாம் வேறுபட்டு, கொடுமைகளைக்களைந்தெறிந்து, அன் பும் அருளும் அறிவும் ஆராய்ச்சியும் பெற்றுப் புது வாழ்வு- பொதுவாழ்வு வாழ வழிகாட்டுகிறது-எங்கள் நடமாடுங் கல்லூரி ! நடமாடுங் கோயில்-நடமாடுந் தெய்வம் என்றெல் லாம் பேசி, கேட்டு, பக்திப் பரவசத்தால் ஆடிப் 2
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/17
Appearance