18 பாடி வந்தவர்கட்கெல்லாம் நடமாடுங் கல்லூரி என்பது வேடிக்கையாகத்தான் இருக்கும். நடமாடுங் கல்லூரி - நடமாடுவதை-நாட்டு மக் களின் கண்களிலும் கருத்திலும், ஏன் வாழ்வின் ஒவ் வொரு எழுச்சிலும் பேச்சிலும் ஒவ்வொரு துறையிலும் நடமாடி வருவன உணரமுடியும் ஊன்றிக் கவனித் தால் ! மனிதன் மனிதத் தன்மைக்குப் புறம்பான செயல் களைப் புரிந்திடும் ஒவ்வொரு நேரத்திலும், மனிதனது அறிவு - தனனைத்தான் தட்டிக் கேட்டிடுகிறது ‘அடாத செயலப்பா-அடாத வேலையப்பா-தகாது-தீது’ என்று அறிவுறித்துகிறதே-மனிதன் தனது தவறைத் தானே உணருகிறானே-அந்த ஒரு வினாடி-அந்த ஒரு கணம்- ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தான் ஒவ் வொரு கல்லூரியாக, நடமாடுங் கல்லூரியாக, அதன் ஆசிரியராக அதே நேரத்தில் அதன் மாணவனுமாக மாறத்தானே மாறுகிறான்? இல்லையென்று கூற முடியுமா? அறிவு - நல்லறிவு-நல்லறிவுக் கல்லூரி-நடமாடுங் கல்லூரி, உலகில் தோன்றியது இன்று நேற்றல்ல- மனித இனம் சிந்திக்கத் தொடங்கிய நாள் முதலாகவே உலகில் மனிதரிடையே நடமாடித்தான் இருக்கிறது ! மனிதன் காடுகளிலும் மேடுகளிலும், மலைகளிலும் மரஞ் செடிகொடிகளிடையே காட்டு மிராண்டித் தனமாக, தனித்தனியே திரிந்து அலைந்து, இலைகளையும் தழைகளை யுமே ஆடைகளாகப் பூண்டு, கிடைத்த காய், கனி, கிழங்குகளைப் புசித்து, சிலபல நேரங்களில், தற்காப்புக் காக எப்படியோ கொன்றுவிட்ட மிருகங்களின் பச்சை இறைச்சியையுமே புசித்து வாந்ழ்தது, இருட்டியதால்,
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/18
Appearance