உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 படியாக சிந்தித்துச் சிந்தித்து, இயற்கையின் எழிலையும் வளத்தையும் வகைப்படுத்தி, வாழ்வுக் கேற்ற வழியில் பண்படுத்திப் பாடுபட்டு உழைத்து உன்னதமான உய ரிய வாழ்வு இன்றைய உலகவாழ்வு-சமூகம் சமுதாயம் நாடுநகரம்-அரசாங்கம் என்ற நிலைகளையுடைய நாகரிக வாழ்வுக் கட்டத்திற்கு துளிர்த்துள்ளது! சிந்தித்த. காரணத்தால், ஏன் ? என்ன? எதனால் என்று எண்ணிப் பார்த்த காரணத்தால் மனித இனம், இயற்கையின் வளத்தைப் பயன் படுத்தியதுடன் இயற் கையின் சக்திகளைக் கண்டு மருளாது, மனக்கிலியும் அடைந்திடாது, மாறாக, இயற்கையின் சக்திகளையே தனது வாழ்விற்கு துணைச்சக்தியாக மாற்றி, பயன்படுத் தக் கொள்ளும் வழியில் முன்னேற முடிந்தது என்பதை மறக்கவோ ! மறைக்கவோ!! மறுக்கவோ!!! யாது! சமுதாயமாக முடி அறிவு - ஆராய்ச்சி இவைகளைக்கொண்டு சமூகம் திரண்ட மனிதரிடையே-மனித வாழ்வில், உலகின் பலப் பல பாகங்களிலும் அந்தந்த நாடுகளின் இயற்கை வளம், வசதி, தட்ப வெட்பம் ஆகியவற்றிற் கேற்ப பலவகையாக வாழ்க்கை முறை களும். நடை உடைமொழி, நாகரிகங்கள் வளர்ந்து வந்தன. உலகில் பல பல இனங்கள், இனங்களுக்கேற்ற பண்புகள், பழக்கங்கள் வழக்கங்கள-மொழிகள், கலைகள் கட்டுப்பாடுகள், அரசுகள்-அரசுமுறைகள்—கடவுள் கள்-கடவுள் வழிபாடுகள்-ஏற்பட்டு வந்தன ! சிந் தனையின் ஆரம்ப காலத்திலே, மனிதர்கள் சிந்திக்கத் தெரிந்தவர்களைக் கண்டு மருண்டனர், முதலில். பின்னர் மக்கள் தலைவன் என்றும், மனிதனது வழிகாட்டியென்