21 றும், மகிமை பெற்றவன் முனிவன்-ஆண்டவன், அவ தாரம் -ஞானி-அரசன்-ஆளப்பிறந்தவன்- என்றெல் லாம் போற்றத் தலைப்பட்டனர். சிந்திக்கத் தெரிந்து சிந்தனா சக்தி மூலம் இயற்கை யின்விளைவுகளைப் புரிந்து நடந்தவர்கள்பிறரையும் நடத் திச்சென்றவர்கள், தம்முடனிருந்த மக்களின் மனதைக் கவர்ந்தனர். மக்களின் தலைவராக-மதகுருமார் என்றும் முனிவர்-தேவர் தேவதூதர்-அரசர் என்ற முறை களிலே வளர்ந்தனர்-வம்ச பரம்பரை பரம்பரையாக இந்த நிலைமைகளைத் தமக்கே- தமது வழி வழி சந்த திக்கே உரியதாகவும் ஆக்கிக் கொண்டனர். அறிவும் ஆராய்ச்சியும் பெற்று அதன் மூலம் பிற ரைச் சுலபத்தில் தமது எண்ணப்படி யெல்லாம் ஆட்டி வைக்கத் தலைப்பட்டனர். மதம் சாஸ்திரம் சம்பிரதா யம்-கடவுள்-கடவுள் தூதர்—அ ர ச ன்—அரசன் கட்டளை இப்படிப் பலப்பல நிலைமைகள், நிர்ப்பந்தங்கள் சாதாரண மக்கள் மீது சுமத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில், ஒரு சிலர், அறிவாளிகள்-ஆனால் நெல்லறிவுப் பாதையிலே அறிவைப் பயன்படுத்திடும் பண்பாடு பெற்றவர்கள் மனிதருக்குள்ளேயுள்ள கண் மூடிக்கொள்கைகளையும் காட்டுத் தர்பார்களையும் மத மூட நம்பிக்கைகளையும் அறிவெனும் சம்மட்டிகொண்டு தாக்கித் தகர்த் தெரியத் தொடங்கினர். கண்டதே காட்சி, கொண்டதே கோலம்' என்று காட்டிய வழியிலே கண்மூடிச் சென்ற மனித சமுதாயம் தன்னை உணர்ந்து, தனது நிலையை, தன்னிட முள்ள அறிவை - ஆராயுந்திறணை உணர்ந்து, தனக்குத்தானே சிந்தித்துச் செயலாற்றும் வண்ணம், மாற்றும் மகத்தான
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/21
Appearance