உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த 22 ஆனால் மிக மிகச் சங்கடமான பணியிலே அந்த அறிவின் தூதர்கள், நல்லறிவுப் போதனைகளை மக்களின் எண்ணங் களிலே தூவி, மனித உள்ளங்களைத் திறந்து, மனிதனது சிந்தனைத் திறனைத் தட்டியெழுப்பி மனித வாழ்வு மேலும் மேலும் நல்லறிவுத் துறையிலே, மனிதர் அனை வரின் நலத்திற்கும், நல்வாழ்விற்கும் பயன்படுமாறு செய்தனர். சரித்திரகாலத்திற்கு முன்பிருந்து பலர், மனித இனம் மறந்துபோன பலர், இந்த நற்பணியை-நல்லறிவுப் போதனையை-நல்லறிவுக் கல்லூரியை நடத்தி வந்தனர். அன்றுதொட்டு இன்று வரை நல்லறிவுக் கல்லூரி நடமாடுங் கல்லூரியாக உலகெங்கும் நாடெங்கும்— அறிவின் தூதர்கள் மூலம் நிலவி வருகிறது-நடமாடி வருகிறது. இத்தகைய அறிவின் தூதர்களின் வழி வந்தவர்கள் உலகின் எப் பகுதியிலும் எல்லாக் காலங்களிலும் தோன் றித் தொண்டு செய்து வந்துள்ளனர் ! சிந்தனைச் சிற்பி சாக்ரடீஸ், சிந்தித்த காரணத்திற் காக, பிறரையும் சிந்திக்கத் தூண்டியதற்காக, நஞ்சுதரப் பட்டார் என்பதும், அப்போதும் அவர் மனமகிழ்ச்சி யோடு மாண்டார் என்பதும் சரித்திரங்கண்ட உண்மை யாகும். நஞ்சு குடித்து, குடிக்கும்படி செய்யப்பட்டு மடிந்த சிந்தனையாளன் சாக்ரடீஸ் வகுத்த வழியும், போதித்த நல்லறிவுக் கருத்துக்களும் அவருடன் சேர்ந்து செத் தொழிந்திடவில்லை !