25 பிஷேகங்கள், கொட்டுமுழக்கங்கள், வாகனவகைய றாக்கள், தீர்த்தயாத்திரைகள் இன்னும் எதையெதையே செய்த வண்ணம் இருக்கிறான் ! மதத் துறையிலும் சரி தமிழனுக்குத் தன்மான மளித்து தமிழனைத் தலை நிமிர்ந்து நடந்திடச் செய்யும் நிலையிலே முறையிலே தமிழன் கைக்கொண்டொழுகிடும் இந்து மதம் இருக்கவில்லையே. தமிழன் பழக்கம் வழக்கம் பாவம் புண்ணியம், மோட்சம் நரகம் பக்தி பாராயணம் ஆண்டவன் வாக்கு, என்று பலபல குருட்டுக் கொள்கைகளைக் கைக்கொண்டு கண்மூடி வழக்கங்களுக் கெல்லாம் தலைவணங்கி தன் அறி வையும் ஆற்றலையும் உழைப்பையும் ஊக்கத்தையும் இழந்து வாடிவதங்கி வறுமையில் புரண்டு நெளிகிறான். வாழ்விலே வேதனை! தொழிலிலேபோதிய வரு வாயற்ற வகையற்ற வரண்டநிலை ! ஏன் பலருக்குத் தொழிலே கிடையாத, கிடைக்காத திண்டாட்ட நிலை! தமிழனிடம் என்ன இல்லை, தமிழகத்திலே எந்த வளம் குறைந்துள்ளது, இத்தகைய இல்லாத, இழி நிலை யிலே உழன்று, ஊசலாடிடும், உளுத்தவாழ்வு வாழ்ந்திட! யோசித்துப்பாருங்கள் ! தமிழனிடம் சிந்தனை, சீர் தூக்கிப் பார்த்திடும் சக்தி-அறிவு-ஆராய்ச்சி மங்கி- மடிந்து மறைந்து கிடக்கிறது என்பதன்றி வேறென்ன காரணம்? கூறுங்கள் ! தமிழன் காலவேகத்தோடு ஒட்டி, வளர்ந்து கருத்து முன்னேற்றம் பெறவில்லை.
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/25
Appearance