26 G ஆம்! காலவேகம்! காலம் செய்திடும் மகத்தான மாறுதல்கள் மனிதவாழ்வில் பூத்துக் குலுங்கிடும் புத் துலக சாதனைகள் - சாதனங்கள் புது வாழ்வுக்கருத் துக்கள், விஞ்ஞான வளர்ச்சியின் விளைவால் மனிதன் பெற்றுள்ள தன்னம்பிக்கை, ஆகியவற்றுடன், தமிழன் தனது புறவாழ்வை மட்டுமே ஓரளவு ஒட்டி முன்னேறி யுள்ளானே தவிர, அக வாழ்விலே ஆயிரமாண்டுகளுக் கும் அப்பாலேதான் உழன்று கொண்டு தவிக்கிறான். தமிழரிலே, பெரும்பாலோர் இத்தகைய இருவேறு நிலைகளிலே, பழமைக்கும் புதுமைக்கு மிடையே ஊச லாடி உணர்வற்று, உள்ள உரமுமிழந்து உளுத்துப் போகின்றனர் என்பதை யார்தான் மறுக்க முடியும்? தமிழரது எண்ணத்திலே பழமை பலப்பல துறை களினும் ஊறிப்பதிந்து உறைந்துவிட்டிருக்கிறது ! தமிழன் எதற்கும் சகுனம், சாஸ்திரம், சம்பிரதாயம், தலைவிதி அவனிட்ட கட்டளை, கொடுத்து வைத்தது, அவ்வளவுதான் என்று பழமை பேசியும், பழக்கத்தை வழக்கத்தை துணைக்கழைத்தும், தமது வறுமைக்கும், வளமற்று வரண்டவாழ்க்கைக்கும் முன்னாள் பாவ மென்றும், ஆண்டவன் அளித்தது அவ்வளவுதானென் றும், தம்மைத்தாமே நொந்து கொண்டு, நைந்த வாழ்வு வாழ்வதிலும் ஓர்வித திருப்தி கொண்டு, நிர்ப்பந்தத் தால், அறிவுக்கு ஒப்பாத கருத்துக்களின் ஆணைக்கு அவசியமற்று ஆனால் அஞ்சி நடந்திடுவதால் ஏதோ ஓர் வித திருப்திகொண்டு வாழ்கின்றனரே வேறென்ன? தவிர தலைவிதி- ஆண்டவன் கட்டளை-சாஸ்திரம் சம் பிரதாயம்-மேலுலக வாழ்வு என்ற கற்பனைக் கருத்துக் களை, அறிவிற்கும்-ஆராய்ச்சி அறிவியல் வாழ்விற்கும் -
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/26
Appearance