27 விஞ்ஞானவளர்ச்சிக்கும் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டு வாழ்ந்திடும் மக்களின் மனவளத்தை மாற்றிப் பண்படுத்தி, பகுத்தறிவுள்ள மக்களாக மாற்றி யமைத் திட வேண்டாமா? நடமாடுங் கல்லூரியின் முதற்பணி-மக்களின் மன வளத்தைப் பண்படுத்துவதுதான். மக்கள், இயற்கையின் விளைவுகளை, வசதிகளை, சக்தி களை தமது அறிவின் துணைகொண்டு ஆராய்ச்சித் திறனைப் பயன்படுத்தி, பகுத்தறிவால் பண்படுத்தி. நல்லவாழ்வு, நாகரிகவாழ்வு வாழ்ந்திடும் வழியும் வகை யும் பெற மனிதர் தன்னம்பிக்கை கொண்டிடும் மனநிலை யைப் பெற்றாக வேண்டும். இதற்கான அறிவுப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது, எங்கள் இயக்கத்தால்--நடமாடுங் கல்லூரியால். மக்களாகப் பிறந்து அனைவரும் சமம். பிறப்பால் பேதமேதுமில்லை என்ற பொதுஉரிமைத் தத்துவத்தைப் போதித்துவந்த பலபல அறிவின் தூதர்களின் போதனையைத் தொடர்ந்து நாங்கள் செய்து வருகிறோம். மக்களின் மனவேற்றுமைக்கும், மீளா ஜாதித் தொல்லைக்கும் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து, அவைகளை அகற்றப் பலவழிகளிலும் பாடுபடுகிது, எங்கள் இயக்கம். ஜாதிகளை ஆண்டவனே ஏற்படுத்தினார் என்று மக் களிடையே, வேதம், ஆகமம் இதிகாசம், புராணம், பார தம், பாகவதம் ஆகியவற்றின் மூலம் பரம்பரை பரம்பரை யாக ஊறிப்பரவியுள்ள எண்ணத்தை, விடாப்பிடிக்
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/27
Appearance