உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கொள்கையைப் பகுத்தறிவுப் பிரசாரத்தின்மூலம், தகர்த் தெரிந்து வருகிறோம் என்பதை மறுக்க முடியாது! ஜாதிகள்-அன்புருவான அருளுருவான-அறிவுரு வான ஆண்டவானால் உண்டாக்கப்படுமா? அன்பும் அருளும்‘அறிவும் ஓருருவான எம்பெருமா னுக்குக் கோயில்கள் ஏன் ? கும்பாபிஷேஷங்கள் ஏன் ? ஆண்டவனுக்கும் பக்தர்கட்கும் இடையே தரகர்தான் ஏன்? ஏன் ? இத்தகைய அறிவுக் கேள்விகளை மக்களிடையே எங்கள் நடமாடுங் கல்லூரி எழுப்பி, மக்களின் சிந்தனை யைக் கிளறி விடுகிறது, நாடெங்கும். எங்கள் எழுத்து, பேச்சு, அத்தனையும் அறிவுக் கொள்கைக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. எங்களால் எழுதப்படும் நாடகம், சினிமா யாவற்றி லும் அறிவுமணம் வீசாமல் இருக்கவில்லை என்பதும் நாடறிந்த உண்மைதான் ! ம் பழமையின் காடியிலே ஊறிப்போன மக்களின் மனம், எண்ணம் சுலபத்திலே, பகுத்தறிவுப் பாதைக்குத் திரும்பாது. தான் ! மேலும் பழமையினால், சமூகத்திலும் சமுதாயத்தி லும் ஏற்றம் பெற்றுள்ள மேல் ஜாதிக்காரர்களும், புத் தறிவுப் பெற்றுவரும் நடமாடுங் கல்லூரியின் பேச்சுக்கும் எழுத்திற்கும், போதனைகட்கும் மக்களை செவிகொடாது போகவேண்டும் என்று எண்ணி எங்களை 'நாத்தீகர்கள்' என்று தூற்றினர்-தூற்றுகின்றனர் !