30 பொழுது போக்காக உழைப்பவர்கள் கூட எப்பொழு தும் பணிபுரியும் முறையிலே எங்கள் இயக்கம் அமைந் துள்ளது. மிகமிக இதனை யழிக்க எவராலும், எத்தகைய சக்தியாலும், எப்போதும் முடியவே முடியாது, என்பது உறுதி ! தனிப்பட்ட சிலரது வாழ்விலே குறுக்கிட்டுக் கோலாகலம் விளைவித்து, தனிமனிதரை வேண்டுமானால் துன்புறுத்தலாம். ஒருசில உடையார்பாளையம் வேலாயுதங்களைப் பிணமாக்கி, மரக்கிளையிலே தொங்கவிடலாம். மஜீத்--பாண்டியன் போன்றார் படுகொலைசெய்யப் படலாம். வேறு என்னமுடியும்? அன்றுதொட்டு, இன்று வரை, உலக வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், அறி வின் தூதர்கள் ஒருவர் ஒருவராக அழிக்கப்பட்டாலும் கொடுமைக்கு-கோர காட்டுமிராண்டித்தனமான சித் திரவதைகட்கு ஆளாக்கப்பட்டாலும், அவர்கள்-அந்த அறிவின் தூதர்கள் தான் மாண்டனரே தவிர, அவரது எண்ணங்கள், மக்களின் நல்வாழ்வுக்கான கருத்துக்கள் மறைவில்லை-மாறாக, மேலும் மேலும் பலபல அறி ஞரை-அறிவின் தூதர்களை நாட்டுக்கு உலகு தந்தன என்பதைக் காணலாம். கடவுள், மதம் -ஜாதி பேதம், பழக்கவழக்கம் ஆகிய துறைகளிலே மாறுதல்-அடைந்து மறுமலர்ச்சி பெற்று, 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்று மனவளத்
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/30
Appearance