31 துடனும், மனவலிமையுடனும் தன்னம்பிக்கைகொண்ட வராக-தன்மானமிக்கவராகதமிழர்-திராவிடர் வேண்டும். வாழ இந்த நல்லநிலைமைக்கு நாட்டு மக்களைப் பண்படுத்தி பக்குவப்படுத்தித் தருவதுயார் ? நல்லதொண்டு செய்து வருவது யார்?-எங்கள் நடமாடுங் கல்லூரி ! தமிழன் எண்ணத்துறையிலே பண்பட்டுவரும் அதே நேரத்தில், தன்னையும், தனது இனத்தையும், தன் நாட்டையும், தனது நாட்டின் இழிநிலையையும் அடிமை நிலையையும் உணர்ந்து அதற்கான எல்லாவித தியாகத் தையும் செய்தாக வேண்டும். நாம் யார்? நமதுநாடு எது? என்பதை உணர வேண்டும். நடமாடுங் கல்லூரியின் முக்கியபணிகளிலே நமது நாட்டை நாமே ஆண்டிடவேண்டும்-அதற்கான பணிபுரிந்தாக வேண்டும் என்பது மிகமிக முக்கியமாகும். நாம் திராவிடர் - நமது நாடு-இன்றைய சென்னை மாகணம்- திராவிட நாட்டை திராவிடரே ஆளவேண் டும். திராவிடம் வடவரின் ஆட்சியிலே சிக்கி, ஏக இந்தியா என்ற பிணைப்பிலே அடங்கி தனது ஆற்ற லையும், பொருளையும் இழந்து-திராவிடரின் நல் வாழ் வுக்குப் பயன்படமுடியாமல் தவித்திடும் அவல நிலையைப் போக்கியாக வேண்டும். அதற்கான பயிற்சி, போர்ப்பணி-பகுத்தறிப் பாதையை-நடமாடுங்கல்லூரியின் பேராசிரியர் அறிஞர் அண்ணா காட்டுகிறார் - அதன்வழி - அண்ணா அண்ணா காட்டும் அறப்போர் வழி நடப்போம்-வாரீர்! -
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/31
Appearance