உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 றச் செய்யவில்லையா ? உன் நாட்டின் வீரத் தலைவர்களை- உன் தாய் தந்தையரை, உன் குருதியிலே பிறந்த சகோ தரனின் படங்களை சுவரிலேமாட்ட ஆணி அடிக்கிறாய்; அந்த ஆணியாருடையது? கண்ணாடியாருடையது? சட் டம் யாருடையது? உன்மானத்தையும், உன்மனைவி, குழந்தைகளின் மானத்தையும். மறைக்க உடம்பிலே சுற் றிக் கொண்டிருக்கும் நான்கு முழம் துணியாருடையது? வெய்யிலின் கடுமை காலிலேபட்டு இரத்தம் வடிப்பதைத் தடுக்க நீ அணியும் மிதியடிகள் யார் செய்தவை ? நீயா? இல்லை! வடநாட்டான்! இரத்தம் சிந்தவில்லையா உன் கண்கள் ? உன் நாட்டிலே பிறந்தவன் ஒரு திராவிடன்-உன் இரத்தத்திலே பங்குக் கொண்டவன்-பாண்டியனின் பரம்பரையிலே உதித்தவன் - மலேயாவிற்கு, இலங் கைக்கு, ஆப்பிரிக்காவுக்கு, போகிறான் வயிற்றைக் கழுவ - பிறந்த நாட்டில் வாழ வகையில்லாத காரணத் தினால் ! அங்கு அவன் எலும்புடைகிறான்; இரத்தம் சிந்து கிறான்; இரத்த வெறிபிடித்த ஏகாதிபத்தியத்தின் கடு மையான பார்வையில் அகப்பட்டு கயிற்றிலே ஊஞ்ச லாடுகிறான் ! அவன் ஊஞ்சலாடும்போது ஏற்படும் காற்று, அத னால் ஏற்படும் ஒலி, திராவிடத்தில் குடிக்கொண்டு திரா விடக் குருதியைக் குடித்துக் கொண்டிருக்கும் வட நாட் நாட்டானுக்கு இன்ப ஒலியாக -ஜீவ ஒலியாக கேட் கிறது! திராவிடத்திலே பிறந்தவனுக்கு திராவிடத்திலே இடமில்லை ! இலங்கைக்குச் செல்கிறான்-அங்கே குண