42 கெஞ்சுவதேன்? சிறிது மிஞ்சினால் உன் நாட்டான் அச்சிறு பதவியிலிருந்தும் கீழே தள்ளப் படுவதேன்? உன் நோகும் உள்ளத்தைக் கேட்டுப் பார் ! "யாதும் ஊரே யாரும் கேளீர்" என்ற பரந்த மனப் பான்மைக் கொண்டு பாரிலே சிறந்து விளங்கிய திராவி டம் - பலபல இனமக்களை ஆதரித்த திராவிடம்-இன்று பசியாற உண்ண உணவில்லாமல் பெற்றெடுத்த தங்கப் பாளத்தை-இரத்தினத்தை-ஐந்துரூபாய்க்கும், பத்து ரூபாய்க்கும் விற்க விலை கூறி அலைவதேன் ? உன் மார் பைத் தடவிக் கேள் ! பொன்னிற நெற்கதிர்கள் விளைந்த உன் தங்கப் பூமியில் பருத்திக் கொட்டைச் சாப்பிடும்படி வடநாடு உனக்குக் கூறுவதேன்? சிந்தித்துப் பார் ! கல்வி விதையெங்கும் தூவி, பகுத்தறிவு மலர்களாக மலர்ந்து தரணியெங்கும் புகழ் மணம் வீசி சிந்தனைத் தென்றலாக வாழ்ந்த திராவிடத்தில் இன்று திராவிட மாணவமாணிக்கங்கள் கல்விக் கோட்டத்தில் காலை வைக்க முடியாமல் கோட்டான்களின் அருவருப்புக் குரலைக் கேட்டு அல்லற்படுவதேன் ? நன்றாக எண்ணிப் பார்! அழகில் சிறந்து பாரிலே பவழப் பாவைகளாகத் திகழ்ந்த திராவிட வனிதைகள், இன்று அடையாளங் தெரியாமல் வாடி வதங்கிக் கோர உருவமாகக் கண்ணுக் குத் தட்டுப்படுவதேன்? இதயத்தைக் கேட்டுத் தெரிந் துக் கொள்! செல்வம் தழைத்தோங்கி வறுமை இன்ன தென்பதையறியாமல் அறத்தோடு வாழ்ந்த திராடவிடம், இன்று நடைப்பாதையிலே நடைப்பிணங்களை நடக்க வீட்டுக் கொண்டிருப்பதேன் ? ஏன் ? வீர இரத்தம் கொதிக்கவில்லையா உன் இரத்தக் குழாய்களில்? தன்மான உணர்ச்சி பீறிட்டெழவில்லையா உன் பச்சை நரம்புகளில்? நாணம் உன் உடம்பைக் குன்
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/42
Appearance