உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 ஆதரவற்று திசை தெரியாமல் கலங்கரை விளக்குத் தெரியாதக் கப்பலைப்போல உன் தாய் நாடு திணறி பெரு மூச்சு விடுகிறது. வடநாட்டு ஏகாதிபத்தியத்தின் புயலிலே அகப்பட்டு அடியோடு அழிவதிலிருந்துத் தப்ப நினைத்துத் தத்தளிக்கிறது. அனாதைத் திராவிடா ! •ஆதரவற்ற திராவிடா! உன் முன்னால் பார் ! நன்றாக இரு கண்களையும் திறந்து பார்! உன் வாழ்வை வதைத்துப் பொசுக்கி அதிலிருந்து எழும் மணத்தை அனுபவிக்கத் துடிதுடிக்கும் வடநாட்டு ஏகாதிபத்தியம்! உன் பின்னால் பார்! நன்றாகப் பார்! வறுமைத் தீயிலே வெந்து போயிருக்கும் உன்னுடம் பைக் கொத்தித் தின்னப் பதை பதைக்கும் ஆரியம் ! அதன் பாது காவலர்களாக இருக்கும் பத்திரிகைகள்- அப்பத்திரிகைககளின் சுவடியைப்பின் பற்றும் உன் இனத்தின் கங்காணிப் பத்திரிகைகள்- பரந்தாமர்கள். புராணங்கள்! நீ நீ எப்படி இன்பமுடன் வாழப்போகிறாய்? எப்படி செல்வமுடன் வாழ்வை வளப்படுத்திக் கொள் ளப் போகிறாய்? உன்னால் எப்படி அமைதியோடு வாழ முடியும் ?" பசியினால் துவண்டுபோய் குழந்தையை விலை கூறும் உன் மனைவியைக் கண்டு உன்னால் என்ன செய்ய முடி யும் ? நீ ஏன் உன் மனைவி மானத்தை மறைக்கக் கட் டிக் கொண்டிருக்கும் புடவையை வட நாட்டானிடம் அடகு வைக்க மாட்டாய் ? நீ ஏன் 'பசி பசி ' என்று துடித்துப் பணமுள்ள இடத்தில் கை வைத்துத் ' திரு டன்' என்னும் இழிவானப் பெயரைத் தாங்கிச் சிறைக் குள் புகமாட்டாய்? உன் மனைவி ஏன் நீ கண்ணயர்ந்து தூங்கும்போது கட்டாரியால் உன் கழுத்தை வெட்ட மாட்டாள் ?