உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 உன்னால் வாழ முடியாது; இன்பமுடன் வாழ முடியாது, வட நாட்டுப் பாசக்கயிறு, அதன் ஏகாதி பத்தியம் உன்னை விட்டகலும் வரை உன்னால் அமைதி யோடு, இன்பத்தோடு, வாழமுடியாது, ஆரியம் விரித்த வஞ்சகமாய வலையில் தெரிந்தோ தெரியாமலோ அகப் பட்டு அவதிப்படுவதைத் தடுக்க, அதன் வலையைக் கிழித் தெரியும் வரை நீ சீருடன் விளங்கமாட்டாய்! மரக்கிளை யிலே தொங்குவாய்-பசியின் காரணத்தினால்! கிணற்றிலே மிதப்பாய்- வறிமையின் காரணத்தி னால்! ஆற்றிலே அடித்துக்கொண்டு போகப்படுவாய்- இன்பமுடன் வாழ வகையறியாத காரணத்தினால் ! வட நாட்டு ஏகாதிபத்தியம், ஆரியமாயை இரண்டும் ஒழிய- மறைய-கரைய—அவைகளிலிருந்து நீ விடுபட வழி இல்லையா? ஏன் இல்லை ? தளர்வுற்ற உன்னுடம்பு ஊக்கத்தைப் பெற வேண்டும். ஆற்றலில்லாத உன் தேகம் உறுதியைத் தேடல் வேண்டும். 'திராவிடத்தை சரி அடைவேன்-இல்லையேல் உன் துப்பாக்கிக் குண்டையாவது மார்பிலே பெறுவேன் என்ற இலட்ச்சியத்தை நீ வீரவாளாகத் கொள்ளள் வேண்டும். வளைந்துப் போயிருக்கும் கழுத்தைச் படுத்தித் தலை நிமிர்ந்து, உன்னை வெட்டிப் புதைக்க அடக்கு முறையைத் தீட்டிக் கொண்டிருக்கும் ஆளவந் தாரைப் பார்க்கும் திறன் வேண்டும். நான் திரா விடன், திராவிடம் திராவிடர்க்கே' என்ற உன்னத மூச்சை-இலட்ச்சிய மூச்சை-நீ பெற வேண்டும். உன் தாயகத்கத்திற்குக் கேடு விளைவிக்கக் கருதியிருக்குக்கும் துரோகிகள், சதிகாரர்கள். அவர்களின் சதிச் செயல் களை கொல்லவேண்டிய ஆற்றல் வேண்டும்.