உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 படியும் செங்குட்டுவன் * கரிகாலன்' ' இளங்கோவன்' போன்ற கப்பல்களை திராவிடக் குடியரசுக் கொடியைத் தாங்கி அயல் நாடுகளுக்குக் கம்பீரமாகச் செல்லவேண்டு மானால், அதற்காக அண்ணா காட்டும் அறப்போரில் உன் ஆவியைத் தியாகம் செய்ய நேரிடும்போது அஞ்சாமல் தியாகம் செய்யவேண்டும். உயிர் இனிமையான் தல்ல, அஞ்சாத் திராவிடர் களுக்கு! உயிர் இனிப்பானதல்ல சிங்கத் திராவிடர் களுக்கு ! தாய் மொழி இனிப்பு-தாய் நாடு இனிமை- இவை யிரண்டுந்தான் உயிர், உண்மைத் திராவிடர் களுக்கு! 997-98 அண்ணாவின் தலைமையில்-திராவிடத்தின் மாணிக் கத் தலைவர் காட்டும் அறப்போரில்-உன் நாட்டு உரி மைக்காகப் போராடும் காலத்தில், தடியடி உன் விலாவை நொறுக்கும்—‘ அய்யோ !' என்று அலறாதே ! வேதனைப்படாதே ! ' அய்யோ !' என்ற அபயக்குரல் சோழனின் சந்ததியினருக்கு. பாண்டியனின் பரம்பரை யினருக்கு, சேரனின் செந்நீர் காரர்களுக்குக் கிடையாது! உன் அன்னை உச்சி மோந்து முத்தமிட்ட இடத்தில் ஏகாதிபத்தியத்தின் ரவை பாய்ந்தால், ' திராவிடநாடு திராவிடர்க்கே' என்று அறை கூவு ! அந்த அறை கூவ லிலே கொழுந்துவிட்டு எழும்பி நிற்கும் உறுதியைக் கண்டு இரத்த வெறி பிடித்த அரசபுரியினருக்கு அச்சம் பிறக்கட்டும்-கிலி பிறக்கட்டும் ! அரசியல் என்பதோர் கார்மேகக் கூட்டம். அதைக் கலக்கடிக்கப் புரட்சி யென்னும் புயற்காற்றுப் போதும்; கார்மேகம் மழைத்துளிகளாகக் கொட்டும், அடக்கு முறையைப் போல! மழைத் துளிகளால் மாநிலம் எவ் வளவு நன்மையைப் பெற முடியுமோ, அவ்வளவு நன் மையை அடக்கு முறையால் மக்கள் அடைய முடியும்.