51 அடக்கு முறை ஈட்டிகள் பாய்ந்து பாய்ந்து தழும்பேறிய உடல்தான் வருங்காலத்தில் திராவிடம் அடையப்போகும் உரிமையை - சுதந்திரத்தை காப்பாற்ற முடியும்-மக் களையும், மாநிலத்தையும் மழைத் துளிகள் காப்பாற்று வதைப்போல ! இதை ஆளவந்த அசட்டுத் தன்மையின ருக்கு நீ காட்டவேண்டும். எத்தனை எத்தனை போலீஸ் பட்டாளத்தைக் கூப் பிட்டு வரமுடியும் அவர்களால்? எவ்வளவு எவ்வளவு இராணுவப் படையினரை திராவிடர்களின் மீது ஏவ விட்டு வேடிக்கை பார்க்க முடியும் அவர்களால்? நான்கு கோடி திராவிட மக்கள்! நாவலந் தீவுக்குச் சென்று திராவிடக் கொடியைப் பறக்கவிட்ட பரம்பரையில் விதைத்திட்ட மக்கள்! வடநாட்டு வம்பர்களைக் கடந்து இமயத்தில் வீரக்கல் நாட்டிய திராவிட சந்ததியினரில் காய்த்திட்ட மக்கள் ! ஆரியப்படைக் கடந்து வெற்றி வாகை சூடிய முன்னோர்களின் குருதியிலே பழுத்திட்ட மக்கள்-திராவிட மக்கள்! கிரேக்க நாட்டு பார்மன்னர் அலெக்ஸாந்தர் வட நாட்டின் மீது படை யெடுத்து, நாட்டிற்குள்ளே வந்த அப்பெரு வேந்தனுக்கு, ஆராதனை காட்டிய வடநாட்டு மக்களால் - அவர்களின் வழிவழிப் பிறந்தவர்களால்- காந்தியின் பெயரிலே சாந்தியே இலட்ச்சியமென வெளி வேடம் போட்டு கட்டிய அரசுக் கோட்டையில் அரசு புரியும் வடநாட்டு வல்லடிகளுக்கு வீரமே உருக்கொண்ட நாம்- அகநானூறு தந்த தாய்களின் குழந்தைகளாகிய நாம்-அடங்கி நடப்பதா? கஜினியும், தைமூரும் கைபர் கணவாயின் மூலம் வட நாட்டைத் தாக்கும்போது வீரமில்லாமல் ஆண்ட வனை வேண்டி அபயக் குரலிட்டு ஒன்றும் பலிக்காமற்
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/51
Appearance