52 போகவே அக் கொள்ளைக்காரர்களுக்கு வரவேற்புரை வாசித்தளித்த வடநாட்டு மக்கள்--அவர்களுடைய பரம் பரையில் உதித்த வம்பர்கள்-தீரமே அழகென கொண்ட நாம்-புற நாநூறு போற்றும் அன்னைகளின் கருவுயிர்களாகிய நாம்-அடங்கி நடப்பதா?.... இத்தகைய எண்ணங்கள் - நினைவுகள் - உங்கள் உள்ளத்திலே தலை நிமிர்ந்து நிற்கும்போது, அரசாள வந்த ஆண்டிகள் ! அடக்கு முறையே கை தேர்ந்த ஆயுதமென நினைக்கும் ஏகாதிபத்தியம் - அது ஏவும் அடக்குமுறை ஆயுதம் உன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு சென்றாலும், உயிருக்கு உலையாக முடிந்தாலும், துச்சமாகத் தெரியும் ; தூசுபோலத் தெரியும் ; துரும் புப் போலத் தெரியும். அடக்கு முறையை அப்போது நீ இன்பமுடன் வரவேற்பாய்-வீரமுடன் வரவேற் பாய் ! ஆண்ட இனத்தைக் காட்டிக்கொடுத்த முதல் எதிரி - குலத்தையே குழி தோண்டிப் புதைக்கத் தோன் றிய குடிகேடன் - விபூஷணன் -அந்த வீணன்-அவ னுடைய சின்னங்தள்-வழி வழிப்பற்றும் பதவிப் பித் தர்கள் -பெற்ற தாயகத்தை, வளர்த்த தாய் மொழியை அலட்சியப்படுத்தும் அக்கிரமக்கார அறிவிலிகள்-அறி க்கை விடுவார்கள் உனக்கு- நீ அண்ணாவின் தலைமை யிலே அறப்போரில் இறங்கும்போது ! கத்துவார்கள். காது கொடுக்காதே! அலறுவார்கள் - அச்சமடையாதே கதறுவார்கள்-கலக்க மடையாதே ! கனைப்பார்கள் ! அவர்களுடையக் கதறலை, அலறலை நீ கேட்டுக் கேட்டுதான் நாசமடைந்து போனாய்-பொலி விழந்துப் போனாய்! உன் நாடு அழிந்துக் கொண்டிருக்கிறது 1 உன் மொழி சீரழிந்து வருகிறது !
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/52
Appearance