உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கற்பு கெட்டது என்று கண்டு கொண்ட ஜலந்த ராசுரனது மனைவி தீக்குளித்து எரிந்து சாம்பலாகவும் காமப் பித்தேறிப்போனத் விஷ்னு கண்தெரியாமல் அவளது சாம்பலிலே புரண்டாராமே ? அவளது சாம்பற் குவியலிலே முளைத்தெடுத்த துள சிச் செடியை மாலையாக அணிந்த பின்னர்தான் விஷ்ணு வின் விபரீத காமப்பித்தம், போதையும், வெறியும் தணிந்தது என்றும், அன்று முதல் துளசி' விஷ்ணுவுக் குப் பிரியமான பொருளென்று, ஆலயங்களிலும் ஆண்ட வனைப் பஜிக்கும்போதும், பூஜிக்கும்போதும் கையாளப் பட்டது என்றும் சில புராணங்களில் காணப்படுவதைக் கண்டும் கேட்டும் படித்தும் விட்ட பிறகு எப்படி இத்த கையோரை கடவுளென மதித்துப் போற்றித் தொழ முடியும்? மான ஈனமற்ற, மக்களைவிட, கீழ்மக்களைவிடக் கேவலமான, காட்டுமிராண்டித் தன காமாகக்களி யாட்டங்களில் ஈடுபட்ட கடவுள்களைப்பற்றிப் பேசி னால், ஆராய்ந்தால், நாத்திகர் என்று தூற்றுவது நல்ல தா? 'நாத்திகர்' என்று குறை கூறி விட்டால் மட்டுமே போதுமா? 7 கடவுளைப் பாதுகாத்திட முடியுமா, வெறும் தூற் றுதலால் மட்டுமே ? கடவுள்' என்பது மனித வாழ்விலே ஒருகட்டுப் பாட்டையும், திட்டத்தையும் நன்நடைக்கு ஒரு முன் மாதிரியாகவுமன்றோ இருக்கவேண்டும்? இதை விட்டு பிறர் மனைவியையும் சிறு மதி படைத்தவனையும் விஷ்ணுவையும், இது போன்ற