தாறுமாறான 61 குணம் படைத்தவர்களை கடவுள் என்று காட்டுவது, கருத்து வளர்ச்சி விஞ்ஞான ரீதியாக வளர்ந்து வரும் இந்தக் காலத்திற்குக் கொஞ்சமும் ஏற்ற தல்ல என்பதைக் ‘கடவுள். கர்ப்பாளர்கள்' நிச்சயம் உணர்ந்தாக வேண்டும். அன்பே கடவுள், அறிவே கடவுள், அருளே கட வுள், பிறர் துன்பம் தவிர்த்தலே மனித வாழ்வின் இலட் சியம், தானும் வாழவேண்டும், தன்னைப்போலவே பிற ரும் வாழவேண்டும் ; வாழ்வோம், பிறரையும் வாழ வைத்து வாழ்வோம், என்ற மனம், மனித மனம் மனித ரிடையே வேரூன்றிப் பரவி நிலைத்திட வழியும், வகை யும், நல்லறிவுப் பாதைகளையும் ஊட்டிடும் முறையிலே கடவுள் தத்துவம் அமைந்தால், அத்தகைய கடவுளை யார் கூடாது என்று கூறுவர் ? - நல்ல கடவுளை- மனிதனுக்கு உண்மையிலேயே நல் லது செய்யும் கடவுளை, நாம் வேண்டாமென்று கூற வில்லை-கூறவே மாட்டோம். மாறாக மக்களைத் தவறான பாதையிலே, இழுத்துச் செல்லும் இழி செயல்களைச் செய்திடும் கடவுள், தேவை தானா? சிந்தித்து, சீர்தூக்கிப்பார்த்து, பின்னர் பின் பற்றுங்கள், என்று எங்கள் இயக்கம், நடமாடும் கல் லூரி-நல்லறிவுக் கல்லூரி நாட்டிலே பேசுவது முறை தானே? தேவையான திருப்பணியைத் தானே செய் கிறோம். இத்தகைய திருப்பணியைத்தான் மேலும் மேலும் மக்களிடையே நடமாடுங் கல்லூரிகள் செய்தாக வேண் டும்!
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/61
Appearance