65 எது குறுகிய மனப்பான்மை? எப்படி குறுகிய மனப் பான்மை? எடுத்துக் காட்டட்டும், வெளிப்படையாக, விளக்கமாக, துணிவிருந்தால்! தனதுமொழி, கலை, கலாச்சாரம் அரசுமுறை மட்டு மல்ல, பொருளாதாரமும் சேர்ந்து பிறஇனத்தால், பிற இனத்துடன் இணைந்து வாழ்வதால் பாதிக்கப் படுவதைக் கண்டித்து, கேட்டு, தன்னைத்தான் பாதுகாத்துக்கொள்ள நினைப்பது எப்படி குறுகிய மனப்பான்மையாகும்? பரந்த மனப்பான்மை கொண்டு வாழ்ந்திடுவது என்பதால் எதையும், எத்தகைய சுரண்டலையும், சுக வாழ்வு செத்த சஞ்சல வாழ்வையும் சகித்துக் கொள்ளத் தான் வேண்டுமா? எப்படி முடியும்? சகிக்கத்தான் வேண்டும் என்று, சுரண்டி வாழ வோரே சன்மார்க்கம், சமரசம், பேசவது தானே குறுகிய மனப்பான்மை? நாட்டிலே உள்ள நானாவித அரசியல், பொருளா தாரத்துறைகளின் பிடிகள் அத்தனையும், இன்று யாரிடம் உள்ளன ? எங்கே உள்ளன ! வடநாட்டினரிடம் தானே? வடநாட்டில் தானே ! மறுக்க முடியுமா, இதனை? வடநாட்டு மொழியான மொழியான இந்தியை இங்கே நுழைத்து திணித்து, திராவிடமொழிகளைச் சிதைத்து திராவிட இனத்தின் பண்பையும், பழக்கவழக்கங்களை யுமே மாற்றித் திராவிடரை தீராத அடிமைத் தளையில் கட்டிப் போட்டிடத் திட்டமிட்டு வேலைகள் நடப்பதை எப்படிச் சகிக்கமுடியும், பொறுக்க முடியும்?
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/65
Appearance