உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 உரிமை கேட்பது குறுகிய மனப்பான்மை ! எந்த நீதிக்குப் பொருந்தும் உரிமையை உறிஞ்சுவது, அதையும் விட உரிமையை உறிஞ்சிக் கொண்டே, சுரண் டிக் கொண்டே, உரிமை கேட்போரைப் பார்த்தது பரந்த மனப்பான்மையில்லையே என்று பரிகசிப்பது? குறுகியமதி, குறுகிய மனப்பான்மை என்று வேறு குற் றஞ்சாட்டுகிறது பரந்த மனப்பான்மை ! வேடிக்கையான, விசித்திரமுமான ஆனால் வஞ்சகம் நிறைந்த நாகரிக ஏகாதிபத்தியக் கொள்கையல்லவா, இது? வெள்ளையன் போனான்: இன்னும் இந்த வடவரின் கொள்ளைகள்-பொருளாதாரச் பாடில்லையே ! சுரண்டல்கள் போன மனப்பான்மை போகாதது மட்டுமல்ல, பரந்த வேண்டும், வேண்டும் என்று போதனை வேறு புரிகின் றனர், ஆட்சியின் உச்சியில் வீற்றுக் கொண்டு! எண்ணிப்பார்க்கவேண்டும், எது குறுகிய மதி- குறைமதியென்று ? பிரறது பொருளைச் சுரண்ட முடியாது போய்விடுமே வாணிபத்தின் பேரால் என்பதற்காக மனம்பதைத்து, ஒரு இனத்தையே அடக்கி ஒடுக்கி, நடத்திட முனைவது தான் குறுகிய மனப்பான்மை என்பது நன்கு விளங்கும், எவருக்கும். மக்கள் உரிமை -மனிதாபி மானம் - தனி மனித உரிமை, என்றெல்லாம் பேசிக்கொண்டு, அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்பில் வாழும் குறிப்பிட்ட னத்தவரது வாழ்வு வளமற்றுப் போகும் வண்ணம்