9 நாங்கள் ஓய்வு நேரத்திலேதான் கட்சிக்காகப் பாடு படுகிறோம். கட்சிக்காகப் பேசுகிறோம், கட்சியை வளர்க் கிறோம், வளர்ச்சிக்கான பிரச்சாரம் புரிகிறோம், என் பதை மறுக்கவில்லை. மறுக்கவேண்டிய அவசியமும் கிடையாது, எங்களுக்கு! நாங்கள் ஓய்வு நேரத்திலே தான் உழைக்கிறோம். கட்சிக்காக. அப்படித்தான் உழைக்க முடிகிறது. நாங்கள் சோம்பேறிகளல்ல, முழுநேரமும் உழைக்காதிருக்க! நாங்கள் கட்சியின் கொள்கையைப் புரியாது, கும்பலோடு கும்பலாகக் கோவிந்தா' போடும் கோஷ்டி யினருமல்ல, என்றோ ஒரு நாள், இருநாள் மட்டுமே முன் வந்து எங்கள் இலட்சியத்தை இன்பத் திராவிடத்தை, திராவிடத்தின் மக்களது நல்வாழ்வுக்காக அடைந்தே தீரவேண்டும் என்பதை மனதார உணர்ந்து, அதனால் உந்தப்பட்டு, உரிமைப் போர்படையின் அணிவகுப்பில் எப்போதும் உள்ளவர்கள்தான். என்ன இருந்தென்ன! உணவு உரிமை யுணர்ச்சி உத்வேகம், புரட்சி மனம், அஞ்சாநெஞ்சம் இன்னும் எவைதான் இருந்தென்ன போயென்ன? ஓய்வு நேரப் பேச்சாளர்தானே, உழைப்பாளர்தானே, என்றுஎங்களைப் பற்றிக் கவலைப்படவேண்டாம் என்று கேலி மொழி களைக் கூறித் தம்மைத்தாம் தேற்றிக்கொள்கிறார் ! தமது சகாக்களையும், கவலைப்படவேண்டியதில்லை' என்று கூறித் தேற்றுகிறார், காமராஜர். 'கவலைப்படவேண்டிய தில்லை' யாரைப் பார்த்து யார், எதற்காக? . காங்கிரஸ்காரர்களுக்குத்தான், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகிவிட்ட காமராஜர் கூறுகிறார். திராவிட இயக்கத்தினரைப் பற்றிக் கவலைப்பட
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/9
Appearance