8 திராவிட இயக்கத்தின் மாபெரும் சக்தியை ஒப்பி எடுத்துக் கூறியிருக்கிறார், வெளிப் படையாக! அவர் கூறிய வாசகங்களுக்கு, வேறு என்ன பொருள்? யோசித்துப்பார்க்க வேண்டும், நாம்! போகிற போக் கிலே, பொழுது போக்காக, எதையோ செய்கிறார்கள், எதையோ பேசுகிறார்கள்! அவர்களுக்கு அதுவே வேலையல்ல ! அவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் ! இது காமராஜரின் கருத்து ! காமராஜரின் கருத்துப்படி பார்த்தால், திராவிட இயக்கத்தின் முக்கியஸ்தர்கள், யாரும் இயக்கத்தின் முழுநேரத் தொண்டர்களாகவோ, ஊழியர்களாகவோ, முழுநேரமும் இயக்கத்திற்காகவே பாடுபடும் முறை யிலேயோ இல்லை. அவரவர்களுக்கு என்று தனித்தனி வாழ்வு, வாழ்க்கைப்பிரச்னை உண்டு. அவரவர்கள் தமது வாழ்விற்கும் வாழ்வுப் பிரச்னைக்காகவும் தனிப் பட்ட முறையிலே தமது நேரத்தை, காலத்தை, நடை முறையை, உழைப்பை, ஊக்கத்தைச் செலவிடுகின்றனர். இப்படிச் செலவான நேரம்போக, மிகுதி நேரத்தை, பொழுது போக்குக்கான நேரத்தை, ஓய்வு நேரத்தைத் தான் இயக்கத்திற்காகப் பயன்படுத்திப் பாடுபடுகிறார்கள் என்ற உன்மையை உணர்ந்து, ஒப்பி, கூறியும் விட்டார் காமராஜர் என்பது மறுக்க முடியாது. தங்களது சொந்த வேலைகளைக் கவனித்து விட்டு தமது உற்றார் உறவினர், குடும்பப் பொறுப்பு பாரம் ஆகியவற்றுக்காக, அதற்கான வழியில் வாழ்வைச் செல விட்டு, மீதியுள்ள நேரத்தில், ஓய்வு நேரத்தில் மட்டுமே கட்சிக்காக, கட்சியின் வளர்ச்சிக்காக உழைப்பவர்கள், உழைக்கக்கூடிய நிலையிலே வாழ்க்கைநிலை யமைந்தவர் கள் திராவிட இயக்கத்தின் தலைவர்கள் முதல் தொண்டர் கள் வரையில் என்பது உண்மைதான். மறுக்கவில்லை!
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/8
Appearance