பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

135


வேட்டி கிழியற வரையிலே அந்தச் சந்தன வாசனை போகவே யில்லே!”

“சந்தன வாசனையும் போகவில்லை; அதன் நினைவும் உங்கள் மனசை விட்டுப் போகவில்லை. அப்புறம்... ?”

“நம்ம சின்னராஜூ நாடகத்தாலே சென்னையிலே கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது...”

“யார் அந்தச் சின்னராஜ ?”

“இப்போ மேலவைத் தலைவராயிருந்துக்கிட்டிருக் கிறாரே, சிந்தனைச் சிற்பி சிற்றரசு - அவருக்குப் பேர் அப்போ அதுதான். அவர் எழுதிய ‘போர்வாள்’ நாடகத்திலே புரட்சியை முன்னின்று நடத்தும் ‘அன்பானந்தனாக நான் வருவேன்....”

அதே வேடத்தை சி.பி.சி., சி.என்.ஏ., கூட.!ஏற்றிருக்கிறார்கள் போலிருக்கிறதே?”

“ஆமாம், பெரியாரைத் தவிர பாக்கி எல்லாருமே அந்த வேடத்தைப் போட்டிருங்காங்கன்னு கூடச் சொல்லிவிடலாம் - அவ்வளவு பிரபலமான வேடம் அது. ஏன்னா, ‘திராவிட நாடு லட்சியமே அந்த நாடகத்திலேதான் அப்போ நிறைவேறிக்கிட்டிருந்தது...”

“அது எப்படி?

“புரட்சித் தலைவன் அன்பானந்தன் வேடம் போட்டுக்கிட்டு, தோள்மேலே திராவிடர் கழகக் கொடியை ஏந்திக்கிட்டு, மொதல்லே நான் ஒரு சலவைத் தொழிலாளி கிட்டே போவேன். சலவைத் தொழிலாளிகளே! சாக அடித்தான் சமரச நோக்கம் உடைய ஒருவரை. அந்த மாசு படிந்த மன்னனின் அழுக்கை வெளுக்கிறீர்கள் நீங்கள்; அவனோ உங்கள் மாசுபடிந்த மனத்தைத் துடைத்தானில்லை. இன்றே புரட்சி செய்யுங்கள், புறப்படுங்கள்!’ என்று ஒவ்வொரு தொழிலாளியிடமும் சென்று பேசிப் புரட்சிக் கனலை மூட்டுவேன். அவர்களும் என்னுடன் கொடியேந்திப்