பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

141


தலையை மொட்டை அடிக்கச் சொன்னேன். அப்புறம் நெற்றியிலும் கைகளிலும் பட்டைப் பட்டையா விபூதியைப் பூசி, தியேட்டர் முதல் வரிசையிலேயே அவ்ரை உட்கார வைத்து, தைரியமா நாடகம் பார்க்கச் சொன்னேன்.”

“அப்போது உங்களுக்கு இருந்த தைரியம் அவருக்கு இருந்ததா?”

“அந்த விஷயத்திலே நானும் அவருக்குத் தோற்றவன் இல்லே, அவரும் எனக்குத் தோற்றவர் இல்லே. ஆனாலும் அப்போ இருந்த சந்தர்ப்பம் அப்படி என்னதான் தைரியசாலிகளாயிருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் தைரியம் சொல்லிக்க வேண்டியிருந்தது; சொல்லிக்கிட்டோம் அவ்வளவுதான், ஆனா...”

“ஆனால் என்ன ?”

“திராவிடர் கழகத்தார் சிலருக்கு இது பிடிக்கல்லே: உனக்கு ஏன் வீண் வம்பு ? அண்டர்கிரவுண்டுக்காரனை அரெஸ்ட் செய்ய வரப்போ உன்னையும சேர்த்து இல்லே அரெஸ்ட் செய்வாங்க?'ன்னு எனக்குப் புத்திமதி சொன்னாங்க...”

“நீங்கள் என்ன சொன்னீர்கள் ?”

“உங்கள் புத்திமதிக்கு நன்றி. ஆனா, இது கட்சியைப் பொறுத்த விஷயம் இல்லே, நட்பைப் பொறுத்த விஷயம். ‘ஆபத்துக்கு உதவுவான். நண்பன்’னு ‘தூக்குத் துாக்கி” நாடகத்திலே சொல்லிட்டு, வாழ்க்கையிலே அதைத் துக்கி எறிஞ்சிடறது அவ்வளவு சரியா எனக்குப் படலே, நீங்க போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டேன்!”

“என்ன இருந்தாலும் நாடகம் முடியும் வரைதானே அவரை உங்களாலே அப்படி வைத்துக் கொண்டிருக்க முடியும்? அதற்கு மேலே.. ?”

“குட்டி போட்ட பூனை கதை தான். ஆண் பூனை எங்கே வந்து தான் போட்ட குட்டிகளைக் கடித்துப் போட்டு