பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைச்சாலைச் சிந்தனைகள்

13


2. கடவுள் கொடுத்த காசு

ங்க ‘ஹிஸ்டரியை எழுதணும்னு ஆரம்பிச்சோம்; அது பொதுவா கலை உலக ஹிஸ்ட்ரியாயில்லே போய்க்கிட்டிருக்கு ?”

“ரெண்டும் ஒண்ணுதான்; என் ஹிஸ்ட்ரி கலை உலக ஹிஸ்ட்ரி; கலை உலக ஹிஸ்ட்ரி என் ஹிஸ்ட்ரி”.

“எல்லாக் கலைஞர்களுக்கும் பிறந்த ஊர் என்று ஒன்று தனியாக இருக்குமே, அந்த மாதிரி உங்களுக்கு எந்த ஊரும் கிடையாதா ?”

“இல்லை; நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே மெட்ராஸில்தான். ‘எம்.ஆர்.ராதா'ன்னா ‘மெட்ராஸ் ராஜகோபால் நாயுடு மகன் ராதா'ன்னு அர்த்தம். அப்பா மட்டுமில்லே, என் தாத்தாவும் இங்கேயேதான் பிறந்து வளர்ந்தார். அவர் மூர் மார்க்கெட்டில் ‘ஆக்கர் கடை’ வைத்திருந்தார். மூர் மார்க்கெட்டுன்னா இப்போ இருக்கிற மூர் மார்க்கெட்டைச் சொல்லலே, பழைய மூர் மார்க்கெட்டைச் சொல்றேன். அது பத்தி எரிஞ்சிப் போச்சு, இப்போ இருக்கிறது புதுசாக் கட்டியது.”

“ஆக்கர் கடை யென்றால்....?”

“பழைய சாமான்களை வாங்கி விற்கிறது. அப்போ மெட்ராஸிலே எங்கே பார்த்தாலும் வெள்ளைக்காரனுக இருப்பானுக, அவனுக புதுசு புதுசா ஏதாவது வாங்கிக்கிட்டே இருப்பானுக. அப்படி வாங்கறப்போல்லாம்