பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

விந்தன்


அப்ப்டியே செய்வோம்'னேன். அப்போ தீட்டியதுதான் தூக்கு மேடை...”

“தஞ்சாவூர் மிராசுதாரர்களில் சிலரை ஞாபகப் படுத்துவதுபோல் இருக்குமே, அந்த நாடகமா?”

“ஆமாமாம், அதுவேதான்!”

“சரி, அப்புறம்...?”

“அப்போ நான் தஞ்சாவூர் கொடி மரத்து மூலையிலிருந்த கிருஷ்ணப் பிள்ளை தியேட்டரிலே நாடகம் நடத்திக்கிட்டிருந்தேன். எதிர்த்தாப்போல டவுன் ஹால்: அதிலே அறிஞர் அண்ணா தீட்டிய ‘வேலைக்காரி’ நாடகத்தை நண்பர் கே.ஆர்.ராமசாமி நடத்திக்கிட்டிருந்தார். அதுக்காக அவர் செஞ்ச விளம்பரங்களிலெல்லாம், ‘அறிஞர் அண்ணா தீட்டிய வேலைக்காரி'ன்னு போட்டுக்கிட்டிருந்தார். ‘அறிஞர் பட்டம் பொதுவானது தானே ?’ ன்னு நானும் ‘தயாராகிறது, அறிஞர் கருணாநிதி தீட்டிய தூக்கு மேடை'ன்னு நோட்டீசு போட்டுக் கொடுத்தேன். கருணாநிதிக்கு இது பிடிக்கல்லே ‘எனக்கு வேண்டாம் அறிஞர் பட்டம், தயவு செய்து எடுத்து விடுங்கள்’னு என்னைக் கேட்டுக்கிட்டார். அந்த விஷயத்திலும் தான் அண்ணாவுக்குத் தம்பியாகவே இருக்கணும்னு அவர் நினைக்கிறதை நாம் ஏன் தடுக்கணும்'னு, நானும் அந்த அறிஞர் பட்டத்தை எடுத்துட்டேன்...”

“அண்ணா அறிஞ'ராயிருக்கட்டும், நாம் கலைஞ’ ராகவே இருந்து விடலாம் என்று அவர் நினைத்தாரோ என்னவோ ?”

“அப்போ ‘கலைஞர்’னு போட்டுக்கலாம்னு அவருக்கும் தோணல்லே, எனக்கும் தோணல்லே. அதாலே மு.கருணாநிதி தீட்டிய தூக்குமேடை'ன்னே விளம்பரம் சேஞ்சோம். காரிலே மைக் வைச்சிச் செய்யற விளம்பரம் அப்போத்தான் வந்திருந்தது. அதுக்கு என்கிட்டே அப்போ கார் இல்லை; சிங்கராயர் தன்கிட்டே இருந்த காரைக் கொடுத்து உதவினார்.