உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைச்சாலைச் சிந்தனைகள்

17


"அந்த நாள் நாடக மேடையிலே சதிராட்டமோ, ஓரியண்டல் டான்ஸுகளோ கிடையாது. என் வயகப் பையன்களை வரிசையா ஒருத்தன் மேலே ஒருத்தனா கோபுரம் மாதிரி காலை அகட்டி நிற்க வைப்பானுக. இங்கிலீஷ் பாண்டு மியூசிக்குக்கு ஏத்தாப்போல நாங்க காலையும் கையையும் அசைச்சி ஆடணும். அதுதான் சர்க்கஸ் டான்ஸ்!”

‘தவறி விழுந்தால் முட்டி உடைந்து விடும் போலிருக்கிறதே?”

“அப்படியும் உடையலேன்னா கம்பெனிக்காரனுக உடைச்சிடுவானுக!”

“ரொம்ப மோசமான வாழ்க்கையாக இருந்திருக்கும் போலிருக்கிறதே... ?”

“எங்கேயோ அடிமை வாழ்க்கை இருந்ததாச் சொல்றாகளே, அந்த வாழ்க்கை அங்கே இருந்தது!”

“அப்புறம்?”

“ராஜா வேஷம், மந்திரி வேஷம் போடறவனுக வீட்டு வேலையிலிருந்து கம்பெனி வேலை வரையிலே நாங்கதான் செய்யணும். பொழுது விடிஞ்சதும் வீட்டிலே இவனுக உடம்பைப் பிடிச்சி, எண்ணெய் தேய்ச்சிக் குளிப்பாட்டி விடுவாக, சூப் வெச்சிக் கொடுப்பாக. ராத்திரி டிராமாவிலே அத்தனை கஷ்டப்பட்டு இவனுக நடிச்சிட்டு வந்திருக்கானுகளாம். என்ன கஷ்டம்?'னு கேட்கிறீங்களா ? சொல்றேன்: ‘மந்திரி, மாதம் மும்மாரி பெய்ததா?'ம்பான் ராஜா ‘பெய்தது, அரசே ‘ம்பான் மந்திரி. ‘ஆகம விதிப்படி ஆலயங்களிலெல்லாம் ஆறு கால பூஜை நடக்கிறதா ?'ம்பான் ராஜா நடக்கிறது அரசே ‘ம்பான் மந்திரி. இதுதான் இவனுக நடிச்சிக் கிழிக்கிற நடிப்பு. இதுக்குப் பொழுது விடிஞ்சதும் இவனுகளுக்கு உடம்புப்பிடி, எண்ணெய்க் குளிப்பு, சூப்பு