பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

விந்தன்


எல்லாம். எங்களுக்கு ? -இவனுக தின்னு மீந்தாத்தான் சோறு. இல்லேன்னா, காலையிலே இவனுக கொடுக்கிற காலணாவிலே ரெண்டு தம்பிடிக்கு ஆப்பம், ஒரு தம்பிடிக்குக் காப்பி வாங்கிக் குடிக்கிறோமே, அதோடு சரி!”

“கைச்செலவுக்கு ஏதாவது வேண்டுமானால்.... ?”

“கடவுள் கொடுப்பார்!”

“கடவுளா ?”

“ஆமாம், ராத்திரி டிராமா முடிஞ்சதும் பெரிய நடிகனுக எல்லாம் நல்லாக் குடிச்சிட்டு நாடகக் கொட்டாவுக்குப் பின்னாலே இருக்கிற மணல் தரையிலே படுத்துப் புரளுவானுக. பொழுது விடிஞ்சப்புறம்தான் எழுந்து வீட்டுக்குப் போவானுக. இவனுக போனதும் நாங்க மணல்லே கையை விட்டுத் துழாவிப் பாப்போம். காலணா, அரையனா, ஓரணா, ரெண்டணாக்கூடக் கிடைக்கும். குடி வெறியிலே இவனுங்களுக்குத் தெரியாம மணல்லே விழுந்து புதையற காசுதான் அத்தனையும்!"