பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

விந்தன்


"ஆமாம், அந்த ஆத்து மேலே பாலம் கடடிக்கிட்டிருந்த சமயம் அது. டிராமா குரூப்போடு நான் அந்த வழியா வேன்லே வந்துக்கிட்டிருந்தேன். ஆத்தைக் கடக்கிற இடத்திலே ஒரே கூட்டம்.என்னடான்னு பார்த்தா, டி.வி.எஸ். லாரி ஒண்னு ஆத்துமணல்லே சிக்கிக்கிட்டிருந்தது. அதைத் தூக்கக் கிரேன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தாங்க. இந்தப் பக்கம் இருநூறு வண்டி, அந்தப் பக்கம் இருநூறு வண்டி நிக்குது. டிராபிக் ஒரே ஜாம். நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன், பொறுக்க முடியல்லே. வேனை விட்டுக் கீழே இறங்கினேன். ஆத்திலே முழங்கால் அளவு தண்ணிதான் இருந்தது. இறங்கி நடந்தேன். ‘யாரப்பா அது, இங்கே பாருங்க. லாரி அசையறதா இல்லே, கிரேனும் அதைத் தூக்கறதாயில்லே. இப்படியே இருந்தா நாங்க எப்போ ஊர் போய்ச் சேர்றது ? ஒண்ணு, கிரேனை ஒரு மணி நேரம் ஒரு பக்கமா தள்ளி நிறுத்தி எங்களுக்கு வழி விடுங்க. இல்லேன்னா இந்த லாரியைக் கிளப்ப எனக்கு அரை மணிநேரம் அவகாசம் கொடுங்கன்னேன். நான் சொன்னதை ஒருத்தனும் காதிலே போட்டுக்கல்லே, அவனுக பாட்டுக்குத் தஸ்.புஸ்னு இங்கிலீஷிலே ஏதோ பேசிக்கிட்டே இருந்தானுக. எனக்குக் கோபம் வந்துடுது. ‘என்னடா, சொல்றதைக் கேட்காம தஸ்.புஸ்ஸுங்கிறீங்களே ?ன்னேன். அப்போத்தான் நான் யாருன்னு அவனுகளுக்குத் தெரிஞ்சுது. அதுக்குள்ளே என்னைச் சுற்றி ஒரு கூட்டமும் சேர்ந்தது. நான் மறுபடியும் விஷயத்தைச் சொன்னேன். “கிரேனைத் தள்ளி நிறுத்தறதுக்கில்லே; உங்களுக்கு வேணும்னா லாரியைக் கிளப்ப அரை மணி நேர அவகாசம் கொடுக்கிறோம்னு கொஞ்சம் கேலியாச் சொன்னானுக. ‘கெடக்கிறானுக'ன்னு நான் வேனைக் கொண்டு வரச் சொல்லி, அதிலே இருந்த கம்பெனி ஆட்களையெல்லாம் கீழே இறங்கச் சொன்னேன். டி.வி.எஸ். லாரியை ‘அன்லோ'டாக்கறதுக்காக அதிலிருந்த சரக்கையெல்லாம் இறக்கி என் வேன்லே போடச் சொன்னேன். இப்போ என்ன ஆச்சு ? லாரி ‘லைட்'டாச்சு,