பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைச்சாலைச் சிந்தனைகள்

23


"எல்லா வேலைகளும் தெரியம். ஒரு சமயம் சேஷசாயி பிரதர்ஸாரே என் வேலையைக் கண்டு அசந்து போயிருக்கிறார்கள்!

“அது என்ன வேலை ?”

“திருப்பாற்கடலில் திருமால் பள்ளி கொண்டிருக்கும் போது அவருடைய தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் அந்த நாள் நாடக மேடைகளில் சுழலும். அதை நான் தான் முதன்முதலாகச் சுழலவிட்டேன். அதற்காக நான் பயன்படுத்தியது பாட்டரி, ஜெனரேட்டரோடு சில தகரத்துண்டுகள். முதல் வரிசையில் உட்கார்ந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த சேஷசாயி, நாடகம் முடிந்ததும் என்னைக் கூப்பிட்டு, ‘அந்த ஒளிவட்டத்தை எப்படிச் சுழல விட்டாய்? என்று கேட்டார். நான் விளக்கினேன். அவருக்கு ஒரே ஆச்சரியம்!”

‘டி.வி. சுந்தரம் அய்யங்கார் கூட ஒரு சமயம் உங்கள் மெக்கானிசத்தைப் பார்த்து....”

“அதுவா?.... அதைச் சொல்றதுக்கு முந்தி அவருக்கும் எனக்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டதுங்கிறதை நான் சொல்லனும், மதுரையிலே ஜகந்நாதய்யர் கம்பெனி முகாம் போட்டிருந்த சமயம் அது. நான் ஸ்பேர் பார்ட் வாங்க அடிக்கடி அய்யங்கார் கடைக்குப் போவேன்...”

‘அய்யங்கார் அப்போ ஸ்பேர் பார்ட் கடை தான் வைத்திருந்தாரா ?”

“ஆமாம். அதுவும் ரொம்ப சின்ன கடை நாலனாவுக்குச் சாமான் வாங்கினால்கூட அவர் எனக்கு மறக்காம காலணா கொடுப்பார். இப்படி ஏற்பட்ட தொடர்பு எங்கே வந்து நின்னதுன்னா, பாலாற்றங்கரையிலே வந்து நின்னுது.....”

“பாலாற்றங்கரையிலா!"