பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

விந்தன்


4. என்.எஸ்.கிருஷ்ணனின் சபதம்


கே.பி.கேசவன், காளி என். ரத்தினம் கூட ஜகந்நாதய்யர் கம்பெனியில்தான் இருந்தார்களா ?”

“இல்லை, அவங்க இருந்தது ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலே. அதிலேதான் பி.யு. சின்னப்பா, எம்.ஜி.ராமச்சந்திரன் கூட இருந்தாங்க. நானும் ஒரு சமயம் அங்கே இருந்தேன். அந்தக் கதையை அப்புறம் சொல்றேன்.”

“ஜகந்நாதய்யர் கம்பெனிக்கும் ‘ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’ என்ற பெயர் உண்டா ?”

“கிடையாது; ஜகந்நாதய்யர் கம்பெனியின் முழுப் பெயர் ‘மதுரை ஶ்ரீ பால மீன ரஞ்சனி சங்கீத சபா’ என்பது. ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் முழுப்பெயர் ‘மதுரை ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனி’ என்பது.”

“என்.எஸ்.கிருஷ்ணன் எந்தக் கம்பெனியிலே இருந்தார் ?”

“அவர் எங்க கம்பெனியிலிருந்து கொல்லத்திலிருந்த டி.கே.எஸ். கம்பெனிக்குச் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டார். போலீசார் கையில் விலங்கிட்டு அவரை அழைச்சிக்கிட்டு வந்தாங்க!”

“கையில் விலங்கா, எதற்கு ?"