பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

விந்தன்


சொன்னேன். நான் நூலேணியும் கையுமா ‘ரோமியோ’ மாதிரிப் போய் அவரை இறக்கிக் கொண்டு வந்துட்டேன். “

“அய்யர் உங்களைச் சும்மா விட்டாரா ?”

“விடுவாரா? எல்லார் மேலேயும் டேமேஜ் க்ளெய்ம் பண்ணி உடனே நோட்டீஸ் விட்டுட்டாரு அதைப் பார்த்ததும் நானும் மணியும் அலறியடிச்சிட்டுப் போய் அவர்கிட்டே சரண்டர் ஆயிட்டோம்...”

“மற்றவர்கள்.... ?”

“வசதியிருந்தது; அவரை எதிர்த்து நின்று அப்பவே காலை ஊனிக்கிட்டாங்க.”

“இத்தனை துடுக்குத்தனம் இருந்தும் அய்யர் உங்களை எப்படி விடாமல் வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தார்?”

“சும்மாவா?... ஆக்டர், எலெக்ட்ரிஷன், மெக்கானிக், டிரைவர் இத்தனை வேலைகளுக்கும் சாப்பாடு போட்டு மாசம் அஞ்சி ரூபாதானே சம்பளம்? இந்தச் சம்பளத்துக்கு என்னை விட்டா சாந்த சொரூபியான மகாத்மாவா வேலைக்கு வருவாருன்னு அவர் நெனைச்சிருக்கலாம்.”

“ஆமாம், உங்களுக்கு ‘அகராதி’ என்று கூட ஒரு பெயர் உண்டாமே ?”

“அதை யார்சொன்னது உங்களுக்கு ?” “கேள்விப்பட்டேன்....”

“யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையும் சம்பந்தம் அண்ணனும் எனக்கு வாத்தியாரா யிருந்தாங்க. அவங்க சொல்லிக் கொடுக்கிறாப் போல நான் செய்ய மாட்டேன்; எனக்கு எது சரின்னு படுதோ அப்படித்தான் செய்வேன். அவங்களுக்குக் கோபம் வந்துடும்; அகராதியைத் தூக்கி என் கையிலே கொடுத்துட்டுப் போயிடுவாங்க...’

“ஏன், தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கவா ?"