பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைச்சாலைச் சிந்தனைகள்

39


"என்னைப் பொறுத்த வரையிலே அதைத் தவிர வேறே எதுக்கு அது பிரயோசனம்?”

“அரிச்சுவடியையே பார்க்காத உங்களுக்கு அகராதின்னு பேர் வாங்கிக் கொடுத்திருக்கிறதே, அது போதாதா ?”

“நீங்க அதை வேறே பேப்பரிலே எழுதி வைக்காதீங்க; அப்புறம் என்னைப் பார்க்கிற பொடிப் பயலுங்கெல்லாம், இதோடா, அகராதி’ ம்பானுங்க!”

“எவனாவது அப்படிச் சொன்னால் அவன் கையிலே நீங்களும் ஒரு அகராதியைத் தூக்கிக் கொடுத்து விடுங்கள்."