பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

விந்தன்


6. கோவிந்தா, கோவிந்தா!

ரு தீபாவளிக்கு நானே வெடி தயார் சேஞ்சேன்...” “என்ன வெடி, யானை வெடியா ?” “இல்லை, அதுக்கும் அப்பன் வெடி!” “நரகாசுரன் ‘நம்ம ஆசாமி என்று சொல்வாரே பெரியார், நீங்கள் தீபாவளி கொண்டாடுவீர்களாா, என்ன ?” “வெடி நரகாசுரனுக்காக இல்லே, திருப்பதி கோவிந்தராஜனுக்காக!”

“அட பாவமே!...அவன் என்ன செய்தான் உங்களை?”

“அவன் ஒண்னும் செய்யலே, அவனுடைய தேவஸ்தான நிர்வாகிங்க ஒரு நாள் என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டாங்க!”

“காரணம் ?”

“அது எனக்குத் தெரியாது. அன்னிக்கு என் கையிலே ஒரு காலணாக்கூட இல்லே; ‘இந்த ஏழுமலையான் எப்போ பார்த்தாலும் நம்மை ஏன் இப்படியே வைச்சுக்கிட்டிருக்கான் ?’னு அவனையே நேராப் பார்த்து ஒரு வார்த்தை கேட்டுட்டு வரலாம்னு நான் மலையேறிப் போனேன். அந்த நாளிலே மலைமேலே ரோடு ஏது, பஸ் ஏது? இருப்பவன் ‘டோலி'யிலே போவான்; இல்லாதவன், ‘கோவிந்தா, கோவிந்தா'ன்னு ‘அடிதண்டம்’ போட்டுக்கிட்டுப் போவான்.