பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைச்சாலைச் சிந்தனைகள்

41


அந்த மாதிரிதான் நானும் போனேன். ‘தரும தரிசனம் இப்ப மட்டும் இல்லே, அப்பவும் காலையிலேதான். லேட்டாப் போனா எங்கே தரிசனம் கெடைக்காமல் போயிடுமோன்னு அவசர அவசரமாப் போனேன். கால்லே முள்ளு மட்டுமா குத்துச்சி, கல்லும் குத்துச்சி. அப்பத்தான் என் உடம்பிலும் கொஞ்சம் ரத்தம் இருக்குன்னு எனக்குத் தெரிஞ்சுது. கொஞ்ச தூரம் போனதும் “கிளுக், கிளுக் குன்னு சத்தம் போட ஆரம்பிச்ச என் கால் முட்டி நட்டு மேலே போகப் போக ‘லொட லொடா'ன்னு ஆடவே ஆரம்பிச்சிடிச்சி. அந்த ‘நட்டை எந்த ‘ஸ்பான ராலே நான் முடுக்குவேன்? ‘அப்பா, வட மலையானே, நீயே முடுக்குடாப்பா ன்னு பல்லைக் கடிச்சிக்கிட்டுப் போனேன். உதடு வறண்டு, நாக்கு வறண்டு, தொண்டையும் வறண்டு போச்சு, ‘கோவிந்தா, கோவிந்தா!’ ன்னர தாடையும் வாயும் தான் அசையுது, சத்தம் வெளியே வரல்லே....”

“ஐயோ பாவம், ஒரு கூஜா தண்ணீராவது கையோடு கொண்டு போயிருக்கக் கூடாதா ?”

“தண்ணி வேணும்னா கிடைக்கும்; கூஜாவுக்கு எங்கே போவேன் ?”

“அந்தக் கஷ்டம் வேறே இருக்கா?...ஆமாம், உங்களுடன் வந்தவர்கள் யாராவது...”

“என்னோடு எவன் வருவான் ? என்னைக் காட்டிலும் ‘அன்னக் காவடி தானே வருவான் ?”

“ஒரு திருத்தம்..."அன்னக் காவடி” என்று சொல்லாதீர்கள்: ‘வெறுங் காவடி’ என்று சொல்லுங்கள்...”

“பேப்பர்காரங்கன்னா பேசறப்போ கூட ‘திருத்தம்’ போடாம இருக்க முடியாது போலிருக்கு. சரி, அப்படியே வைச்சுக்குவோம்..."என்ன ஆனாலும் சரி,இந்தத் திருவேங் கடத்தானை இன்னிக்குப் பார்க்காம விடறதில்லே’ ன்னு நான்