பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

விந்தன்


விழுந்து எழுந்து போனேன். கடைசியிலே காத்துப் போன பலூன் மாதிரி அங்கே போய்த் துவண்டு விழுந்தா...!

“என்ன ஆச்சு, பாலாஜியே காணாமல் போய் விட்டாரா?”

“அது இந்தக் காலத்துப் பக்திமானுங்க செய்யற வேலையில்லே? அந்தக் காலத்துப் பக்திமானுங்க அப்படியெல்லாம் செய்யறதில்லே. பாலாஜி இருந்தான்; ஆனா, நான் பாக்கும்படியா அவன் இல்லே...”

“ஏன் ?”

“அன்னிக்குக் காலையிலே ‘தரும தரிசனம்’ இல்லையாம்; மாலையிலேதானாம்.....எப்படி இருக்கும் எனக்கு.... ?”

“என்னைக் கேட்காதீர்கள்; அந்தத் தரிசனத்துக்காக நீங்கள் பட்ட பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கே இப்போது எப்படியோ இருக்கிறது!”

“பசி வேறே, தாகம் வேறே கையிலே ஒரு தம்பிடிகூட இல்லாத கஷ்டம் வேறே, அன்னிக்குச் சாயந்திரம் அந்த ஊரிலே நடத்தவிருந்த நாடகத்துக்காக ஒத்திகை பார்ப்பாங்களே, அதிலே கலந்துக்கணுமேங்கிற கவலை வேறே....இத்தனையும் வைச்சுக்கிட்டுத் தரும தரிசனத்துக்காக அங்கே காத்துக்கிட்டிருக்க முடியாதேங்கிற ஆதங்கம் வேறே...எல்லாமாச் சேர்ந்து என்னை ஒரு வெறியனாவே ஆக்கிடிச்சி...தலை முடியைப் பிடிச்சி இழுத்துக்கிட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தேன்...தீபாவளி வர ஒரு வாரம் ரெண்டு வாரம் இருக்கிறப்பவேதான் நம்ம ஊர்ப் பயலுங்க ‘டப், டுப்'புன்னு பட்டாக கொளுத்த ஆரம்பிச்சுடுவானுங்களே ?.. அந்தச் சத்தம் அங்கேயும் கேட்டுக்கிட்டிருந்துச்சி..அதைக் கேட்டதும், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டதும் ‘கண்டேன், கண்டேன்'ன்னு கூவியமாதிரி நானும் கூவிக்கிட்டே தட்டுத் தடுமாறிக் கீழே வந்தேன்... அந்தக்