பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

விந்தன்


"அவர்கள் நல்ல காலம், உங்கள் குண்டிலிருந்து தப்பிப் பிழைத்தார்கள்; திருப்பதி வேங்கடமுடையானின் போதாத காலம்....”

“அவசரப்படாதீங்க, முழுக்கக் கேளுங்க...அங்கே நாங்க தங்கியிருந்த வீடு ஒரு மொட்டை மாடி வீடு. அந்த வீட்டு மாடியிலே நான் வெடி குண்டைத் தயார் சேஞ்சிக் காய வைச்சேன்...சாயந்திரம் அது காய்ஞ்சிடிச்சான்னு பார்க்கப் போனேன். அப்ப என் வாயிலே புகைஞ்சுக்கிட்டிருந்த சிகரெட் நெருப்பிலிருந்து ஒரு பொறி தெறித்து அந்த வெடிகுண்டு மேலே விழுந்துடிச்சி..அவ்வளவுதான்; ‘டமார்’னு ஒரு சத்தம்.வெடிச்சது வெடிகுண்டு மட்டுமில்லே; மாடியுந்தான் ...நான் எங்கேயோ தூக்கியெறியப்பட்டேன்; அந்த வீட்டிலிருந்த நாற்பது ஐம்பது பேருக்குச் சரியான அடி....”

“கோவிந்தா, கோவிந்தா!” “என்ன, ‘கோவிந்தா'ன்னு கையெடுத்துக் கும்பிட ஆரம்பிச்சிட்டீங்க?”

“மன்னிக்க வேண்டும்...நான் ஏழுமலையானின் பக்தன்; அவருடைய சக்தியை நினைத்து...”

“விஷயம் தெரிஞ்சப்புறம் எல்லாரும் அப்படித்தான் பேசிக்கிட்டாங்க...அதுக்கு மேலே கேட்கணுமா?...தகவல் எதுவும் கொடுக்காமலே போலீஸ் வந்தது... காயம் பட்டவங்களைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியிலே சேர்த்தாங்க என்னை “அரெஸ்ட் சேஞ்சிக் கொண்டு போய் ‘லாக்அப்’ பிலே வைச்சாங்க...அய்யர் ஆடியே போய்விட்டார். நல்ல வேளையா அப்போ அந்த ஊர் போலீஸ் சூப்பிரெண்ட்டாயிருந்தவர் எங்க கம்பெனி ஹீரோ எஸ்.வி. வேங்கடராமனின் சொந்தக்காரராயிருந்தார். அவரைச் சரிக்கட்டி நிலைமையைச் சமாளிச்சோம். ‘வெடிச்ச வெடி சாதாரண வெடிதான்; நாடகமேடை ராஜாக்களுக்கு மரியாதை குண்டு போடறதுக்காகச் சேஞ்சிக் காய வெச்சிருந்த வெடி'ன்னோம். ‘அந்த வெடியிலே மனோசிலை ஏன் வந்தது?ன்னு கேட்டாங்க. ‘அது வெறும்