பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைச்சாலைச் சிந்தனைகள்

45


கருமருந்துதான்; மனோ சிலை மாதிரி தெரியுது"ன்னு அவங்க கண்ணிலே மண்ணைத் தூவினோம். ‘வெடி சாதாரண வெடியாயிருந்தா மாடியே பொளப்பானேன்?னு கேட்டாங்க. ‘பழைய கட்டடம், அதான் பொளந்து போச்சு'ன்னோம்...”

“வேறே சூப்பிரெண்ட்டாயிருந்தால் இதையெல்லாம் நம்பியிருக்கமாட்டார்.”

“அதிலே என்ன சந்தேகம்?.....இதிலிருந்து நீங்களும் நானும் தெரிஞ்சிக்க வேண்டியது என்னன்னா, ‘சூப்பிரெண்ட் வேண்டியவராயிருந்தா குற்றவாளியை நிரபராதியாக்கிடலாங்கிறதுதான் .. மனுஷனுக்கு மனுஷனே வழங்கிக்கிற நீதியிலே உள்ள குறை இது...”

“அந்தக் குறையை நிவர்த்தி செய்யத்தான் கடவுள் இருப்பதாகச் சொல்கிறார்கள்...”

“அவர் வழங்கிற நீதி மனுஷனுக்கு எங்கே தெரியுது?...மனுஷனுக்கு மனுஷன் வழங்கிற நீதிதானே தெரியுது... ?”

“அதெல்லாம் பெரிய விஷயம் என்று சொல்வார்கள்; நாம் நம்முடைய விஷயத்துக்கு வருவோம்.”

“நம்முடைய விஷயம் அதுக்கு மேலே என்ன இருக்கு ?....கேஸ் கோர்ட்டுக்குப் போகல்லே, சூப்பிரெண்ட்டோடு நின்னு போச்சு. நான் விடுதலையாயிட்டேன்...”

“கோவிந்தா, கோவிந்தா!”

“திரும்பவும் ஏன் ‘கோவிந்தா போடறீங்க?”

“நீங்கள் விடுதலையானதும் அவன் அருள்தானே ?” “அப்படியா ? ‘இன்னிக்கு இதுக்கு மேலே சொல்ல வேணாம்’ னு நான் நினைக்கிறேன். இதுவும் அவன் அருளாத்தான் இருக்கணும். நீங்க போயிட்டு வறீங்களா ?”

“தாங்க்ஸ்!"