பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7. நாடக மேடையில் ஜேம்ஸ்பாண்ட்

ப்போ யாரோ ஜேம்ஸ்பாண்டுன்னு சொல்லிக்கிறாங்க, நான் அந்த நாள் நாடக மேடையிலேயே ஜேம்ஸ்பாண்டா நடிச்சிருக்கேன்...”

“அப்போதே அமெரிக்க நடிகன் சீன்கானரி நடித்த ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வருமா ? அவனை உங்களுக்குத் தெரியுமா ?”

“தெரியாது; அவன் நடிச்ச படங்களையும் நான் பார்த்தது கிடையாது. ஒரு நடிகனைப் பார்த்து இன்னொரு நடிகன் அப்படியே நடிச்சிட்டா அவனுக்கு நடிகன்னா பேரு ? ‘பிளாட்டிங் பேப்பர்’னு பேரு!”

“கலையை வளர்க்க அதுவும் ஒரு வழி என்றல்லவா சொல்கிறார்கள் ?”

“அது வழியில்லே, தற்கொலை ...எனக்குத் தெரிஞ்ச வரையிலே அந்த நாளிலே டக்ளஸ் பேர் பாங்ஸ்னு ஒரு நடிகன் இருந்தான். அவன் நடிச்ச ஊமைப் படம் இங்கே அப்பப்போ வந்துகிட்டிருக்கும்; அதை விட்டா எங்க நாடகம். இந்த ரெண்டைத் தவிர அந்தக் காலத்து ஜனங்களுக்கு வேறே பொழுது போக்கு கிடையாது.”

“பரதம், சங்கீதம்...”

“பரதம் பரதம்னு சொல்லிக் கிட்டு அப்போ ‘தா, தை'ன்னு குதிச்சிக்கிட்டிருந்தவங்களே வேறே. அவங்களும் அவங்க - கலையும் அப்போ கடவுளுக்கு