பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

விந்தன்


'நான் சந்தித்த முதல் சுய மரியாதைக்காரரே அவர்தான்’

‘அப்புறம் ?’

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சவுக்கடி சாத்தப்பிள்ளை கிட்டே சொல்லி உனக்கு நான் லைலென்ஸ் வாங்கித் தரேன், நீ என்கிட்டே டிரைவராயிருன்னார் அய்யர்...”

“அதுவரையிலே நீங்கள் லைலென்ஸ் வாங்கவே யில்லையா ?”

“ஊஹாம்.’

“ஓசிப்பாஸ் தயவிலே லைலென்ஸ் இல்லாமலே காரை ஓட்டிக் கொண்டிருந்தீர்களாக்கும்...சரி, பிறகு ?”

“என் நோக்கம் அய்யருக்கு டிரைவராயிருக்கிறது மட்டும் இல்லையே, நடிகனாகவும் இருக்க வேண்டுமே! அதாலே ‘நான் ஊருக்குப் போயிட்டு வந்துடறேன்"னு சொல்லிவிட்டு மெட்ராசுக்கு விட்டேன் சவாரி!"