பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. வஸ்தாதுக்குப் பெண் பார்த்த வஸ்தாது

சென்னைக்கு வந்ததும் மறுபடியும் ‘ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி'யில் சேர்ந்திருப்பீர்கள். சின்னப்பா, எம்.ஜி.ஆரை யெல்லாம் சந்தித்திருப்பீர்கள்...”

“எங்கே சந்திக்கவிட்டார் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை ? அவர் பெரம்பூரிலே, யாரோ ஒரு ரொட்டிக் கடைக்காரர் தயவிலே ஒரு நாடகக் கம்பெனியை ஆரம்பிச்சி வைச்சுட்டு, அதை நடத்த சரியான ஆள் இல்லாம தவிச்சுக்கிட்டிருந்தார்....”

“ஏன், அவர் கம்பெனியை அவரால் நடத்த முடியாதா?”

“அந்தக் காலத்திலே நாடகக் கம்பெனி நடத்தறது அவ்வளவு சாதாரண விஷயமில்லே, ரொம்பப் பெரிய விஷயம்.... மொதல்லே நாடகக்காருங்கன்னு சொன்னா, உள்ளூரிலே யாரும் தங்க இடம் கொடுக்க மாட்டாங்க. அதாலே நாங்க ஊருக்கு வெளியே உள்ள சத்திரம், சாவடியிலேதான் தங்குவோம்...”

“கலையை வளர்க்க வந்த கலைஞர்களுக்கா இந்தக் கதி ?”

“இந்த மாதிரி ‘டூப்’பையெல்லாம் அப்போ யாரும் நம்பமாட்டாங்க; ‘கூத்தாடி வயித்தை வளர்க்க வந்த