பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

விந்தன்


“அவர்களில் இரு பெண்களுக்குத்தான் நீங்கள் சிறையில் இருத்தபோது கலியானம் நடத்தது, இலலையா?”

“ஆமாம். ரஷ்யாவுக்கும், சம்பத் ராணிக்கும் நடந்தது.”

“அப்படி என்ன அவசரம் வந்தது அவர்கள் கலியாணத்துக்கு ?”

“நான் வெளியே இருந்தப்பவே முடிவு சேஞ்சி வைச்சிருந்த கலியாணம் தான் அது. மாப்பிள்ளைங்க ரெண்டு பேருமே சொந்தக்காரங்க அண்ணன் தம்பிங்க. ஒருத்தர் பேர் சீனிவாசன்; இன்னொருத்தர் பேர் ராஜேந்திரன். மூத்தவர் வேலை விஷயமா திடீர்னு அமெரிக்காவுக்குப் போகும்படியா ஆயிடிச்சு. தனியா அவரை அங்கே அனுப்பி வைக்க வேணாம், கலியாணத்தைப் பண்ணி அனுப்பி வைப்போம்'ன்னு தனம் நெனைச்சா எனக்கும் அது சரின்னு பட்டது. ‘நான் வெளியே இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பெரியாரை வைச்சி ரெண்டு பேருக்குமே கலியானத்தைச் சேஞ்சி முடிச்சிடுங்க'ன்னு சொல்லிட்டேன். அப்படியே. நடந்தது. மணமாலையோடு அவங்க ஜெயிலுக்கு வந்து என்னை வாழ்த்தச் சொன்னாங்க வாழ்த்தி அனுப்பி வைச்சேன்.”

“இந்த நிகழ்ச்சி உங்கள் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத நிகழ்ச்சியாயிருக்கும், இல்லையா?”

“இது ஒரு நிகழ்ச்சிதானா, இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிங்க...”

“மூன்றாவதாகத்தான் கீதாவை விரும்பிப் பதிவுத் திருமணம் செய்து கொண்டீர்கள் போலிருக்கிறது ?”

“ஆமாம்; அவளுக்கும் இப்போது நாலு குழந்தைங்க இருக்கு.”

“குடிப்பதை நிறுத்தி வைத்ததோதான் இனிமேல் நீங்கள் கலியாணம் செய்து கொள்வதையும் நிறுத்தி வைக்க வேண்டும் போலிருக்கிறது!"