சிறைச்சாலைச் சித்தனைகள்
75
நான் வாங்கினேன். வாங்கி, ஊரிலே இருக்கிற மாடுகளுக்கு இங்கிருந்து வைக்கோல் ஏற்றி அனுப்பினேன்!”
“இது என்ன கூத்து ? இம்பாலா காரிலா வைக்கோல் ஏற்றி அனுப்பினர்கள் ?”
“வைக்கோல் மட்டும் இல்லே, அதைப் பிரித்துப் போட மாட்டுக்காரப் பயல்களையும் அதில்தான் ஏற்றி அனுப்பினேன்!”
“நல்ல வேடிக்கைதான் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுக்காகக் கூட அதை ஒரு நாள் உங்களிடம் இரவல் கேட்க வந்தார்கள் போலிருக்கிறதே?”
“ஆமாம், வந்தாங்க. ‘இந்த ராதா ஏறவே அந்தக் காருக்குத் தகுதியில்லேன்னு நான் நினைக்கிறேன்; அந்த ராதா எதுக்கு ஏறணும் ?னு சொல்லி அனுப்பிவிட்டேன்.”
“இப்போது அந்தக் கார் யாரிடம் இருக்கிறது ?”
“ஜோதி அம்மாக்கிட்டே இருக்கிறதாச் சொல்றாங்க.
“பாவம், அதற்கு உயிரும் உணர்ச்சியும் இருந்திருந்தால், நீங்கள் செய்த அவமானத்துக்குத் தற்கொலை செய்து கொண்டிருக்கும்!”
“மனுஷனே இப்போ அவமானத்துக்கு அஞ்சறதில்லே, கார் எங்கே அஞ்சப் போவுது ?”
“சரஸ்வதிக்குப் பிறகுதான் தனம் உங்கள் வாழ்க்கையில் பங்கேற்றார்களா ?”
“ஆமாம். தனம் வேறே யாருமில்லே, சரஸ்வதியின் தங்கச்சி தான்.”
“வாசுவுக்குப் பிறகு... ?”
“சரஸ்வதிக்குக் குழந்தைங்க இல்லே, தனத்துக்குத்தான் அஞ்சு குழந்தைங்க..."