74
விந்தன்
“கலியாணத்துக்குப் பிறகு ?” “நாடகக் கம்பெனியிலே வேலை பார்த்ததோடு நான் நிற்கல்லே; வெளியேயும் மெக்கானிக்காகவும், எலெக்ட்ரீஷியனாகவும் வேலைபார்த்துச் சம்பாதிச்சேன். அப்பத்தான் வாசு பிறந்தான்...”
“அவரும் உங்களைப் போலவே நடிகராகிவிட்டாரே, அவரை நீங்கள் படிக்க வைக்கவில்லையா ?”
“நல்லாக் கேட்டீங்க! என் கிட்டே இருந்தா என்னைப் போலவே உருப்படாமப்போயிடப்டோறான்னு திருச்சியிலே இருக்கும் அவன் மாமன் லட்சுமணன் வீட்டுக்கு அவனை நான் படிக்க அனுப்பி வைச்சிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு பள்ளிக் கூடமே கட்டும் அளவுக்குச் செலவழிச்சும் பார்த்தேன். பையன் புத்தி நடிப்பிலேதான் போச்சே தவிர, படிப்பிலே போகல்லே....?”
“பங்களா, கார் போன்ற சுக செளகரியங்கள் கூடச் சில குழந்தைகளைப் படிக்க விடாமல் செய்து விடுவதுண்டு....”
“அந்த விஷயத்தில் நான் ரொம்ப கண்டிப்புக்காரன். சின்ன வயசிலே அந்த மாதிரி சுக செளகரியங்களையெல்லாம் நான் அவனை அனுபவிக்கவிடறதில்லே.”
“இம்பாலா கார் கூட வாங்கினர்களாமே, ஆசைக்கு ஒரு நாள் அதில் ஏறக்கூடவா அவரை நீங்கள் அனுமதிக்கவில்லை ?”
“அவனை ஏற்றவா நான் அந்தக் காரை வாங்கினேன்?”
“வேறு எதற்கு வாங்கினர்கள் ?”
“அதன் விலை ஏறக்குறைய லட்ச ரூபாயாயிருக்கவே ஹைசொசைடியிலே அதுக்கு ஏக மதிப்பு இருந்தது. அது எனக்குப் பிடிக்கல்லே; ‘வர்ணம் அடிச்ச தகரத்துக்கா இவ்வளவு மதிப்பு ?’ ன்னு நினைச்சேன். அந்த மதிப்பை என்னைப் பொறுத்த வரையிலே குறைச்சிப் பார்க்கவே அதை